பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:45

சென்னை:சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம், 'சுவிஷ் 125 ஸ்கூட்டர்' என்ற இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து, இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) அதுல் குப்தா கூறியதாவது:இந்தியாவில், இருசக்கர வாகனங்கள் விற்பனை, வளர்ச்சி கண்டு வருகிறது. நிறுவனத்தின், இருசக்கர வாகனங்களுக்கு, சென்னை முக்கிய சந்தையாக திகழ்கிறது. இச்சந்தையில், நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இதையடுத்து, ஸ்கூட்டர் வகையைச் சேர்ந்த, 'சுவிஷ் 125' என்ற புதிய ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது எழிலான வடிவமைப்பு, எரிபொருள் சிக்கனம், 4 ஸ்ட்ரோக்குடன், 125 சி.சி. இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெள்ளை, கருப்பு, கிரே, நீலம் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும், இந்த வாகனத்தின் விலை, 48 ஆயிரத்து 742 ரூபாயாகும். இவ்வாறு குப்தா கூறினார்.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|