பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:46

புதுடில்லி:பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின், 5 சதவீத பங்குகளை பங்குச் சந்தையில் ஏலம் விட்டு, 12 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத்துறை நிறுவனங்களில், கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 5-10 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 40 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.ஆனால், பங்குச் சந்தை நிலவரம் சரியில்லாததால், இதுவரை 1,400 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் ஒன்றரை மாதமே உள்ள நிலையில், ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை பங்குச் சந்தையில் ஏலம் விடவும், இதே போன்று, பீ.எச்.இ.எல்., நிறுவனத்தின் பங்குகளை ஏலம் விடுவதன் மூலம், 2,500 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் கிடைத்ததும் ஏல விற்பனை நடைபெறும்.ஏலம் வெற்றி பெறுவதைப் பொறுத்து, இதே முறையில் இதர பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்.
பங்குச் சந்தையில், ஏல முறையிலான பங்கு விற்பனை குறித்த விதிமுறைகளை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, 'செபி' இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது. இதையடுத்து, முதன் முறையாக இத்தகைய முறையில், ஓ.என்ஜி.சி., மற்றும் பீ.எச்.இ.எல்., நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|