பதிவு செய்த நாள்
26 பிப்2012
01:20

புதுடில்லி : மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில், விமான கட்டணம் மிகவும் குறைவாக உள்ளது என ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, மும்பையில் இருந்து 1,521 கி.மீ., தூரமுள்ள டில்லிக்கு விமானத்தில் செல்ல, ஒரு மாதத்திற்கு முன்பாகப் பதிவு செய்வோரிடம் இண்டிகோ நிறுவனம் 4,156 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறது.அதேசமயம், சீனாவில், இதே தூரத்திற்கான விமான கட்டணம், இந்திய ரூபாய் மதிப்பில் 17 ஆயிரத்து 300 ஆக உள்ளது.
பிரேசில் நாட்டில், இதே தூரத்திற்கான விமான கட்டணம், இந்திய ரூபாய் மதிப்பில் 7,600 ஆக உள்ளது. டில்லி - கோல்கட்டா இடையிலான 1,542 கி.மீ தூர விமான பயணத்திற்கு, இண்டிகோ நிறுவனம் 4,156 ரூபாய் வசூலிக்கிறது. அதே சமயம், சீனாவில் இதே தொலைவிற்கு விமானத்தில் பறக்க 23 ஆயிரத்து 186 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இதே போன்று, 2,000 கி.மீட்டர் தூரத்திற்கும் அதிகமான விமான பயணத்திற்கும், வெளிநாடுகளை விட, இந்தியாவில் கட்டணம் குறைவாகவே உள்ளது. எடுத்துக்காட்டாக, சென்னை-டில்லி இடையிலான 2,176 கி.மீ. விமான பயணத்திற்கு, இண்டிகோ நிறுவனம் முன்பதிவு திட்டத்தின் கீழ் 4,555 ரூபாய் வசூலிக்கிறது.
சீனாவில் இதே தூரத்திற்கான விமான கட்டணம் 23 ஆயிரத்து 186 ரூபாயாகவும், பிரேசிலில் 11 ஆயிரத்து 400 ரூபாயாகவும் உள்ளது. இந்தியாவில் விமான கட்டணங்கள் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, குறைந்தபட்சம் 30 சதவீத அளவிற்கு விமான கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், விமான துறையில் காணப்படும் கடும் போட்டியால், கட்டணங்களை உயர்த்த நிறுவனங்கள் தயங்குகின்றன. எனினும், சென்ற டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில், விமான கட்டணங்கள் 18 சதவீதம் உயர்ந்துள்ளதாக அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|