சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 4.71 லட்சம் டன்னாக குறைவு சோயா புண்ணாக்கு ஏற்றுமதி 4.71 லட்சம் டன்னாக குறைவு ... டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் சமையல் காஸ் தட்டுப்பாடு : தென்மாவட்டங்களுக்கு சப்ளை இல்லை டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் சமையல் காஸ் தட்டுப்பாடு : தென்மாவட்டங்களுக்கு ... ...
பருத்தி ஏற்றுமதிக்கு தடை: திருப்பூர் தொழில் துறை வர@வற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2012
00:10

திருப்பூர்,: பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதால், திருப்பூர் தொழில் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.சர்வதேச அளவில் அனைத்து ஜவுளி சந்தைகளிலும், சீனா முன்னோடியாக உள்ளது. அங்கு நடப்பாண்டில் பருத்தி விளைச்சல் குறைவாக இருப்பதால், இந்திய பருத்தியை நம்பியுள்ளது. இந்தியாவில் இருந்து பருத்தியை இறக்குமதி செய்வதில், அந்நாட்டு நிறுவனங்களும், அரசும், தீவிரமாக உள்ளன.கையிருப்புஇந்தியாவில், நடப்பாண்டில், 55 லட்சம் பொதிகள் கையிருப்பில் இருக்கும். இறக்குமதி ஐந்து லட்சம் பருத்தி பொதிகள், விளைச்சல் 3.40 கோடி பொதிகள் என மொத்தம், 4 கோடி பருத்தி பொதிகள் என, மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருந்தது. இதில், 2.40 கோடி பொதிகள், உள்நாட்டு தேவைக்கு ஒதுக்கப்பட்டது. மருத்துவம் உள்ளிட்ட பிற தேவைக்காக, 21 லட்சம் பொதிகள் ஒதுக்கப்பட்டது. மீதியுள்ள, 1.39 கோடி பொதிகள் பருத்தியில், 84 லட்சம் பொதி பருத்தியை ஏற்றுமதி செய்யவும், 55 லட்சம் பொதி பருத்தியை கையிருப்பாக வைக்கவும், முடிவு செய்யப்பட்டது.கடந்த ஐந்து மாதங்களில், நிர்ணயிக்கப்பட்ட, 84 லட்சம் பருத்தி பொதிகள், ஏற்றுமதியாகி விட்டன. மொத்த ஏற்றுமதியில், 60 சதவீத பருத்தி, சீனா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.வியாபார ஒப்பந்தம்இந்தியாவின் நிலைபாடுகளை அறிந்து கொண்ட சீனா, இரண்டு ஆண்டுக்கு தேவையான பருத்தியை இறக்குமதி செய்து, பதுக்கி வைப்பதென முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி, பருத்தி வியாபாரிகளிடம், வியாபார ஒப்பந்தம் நிறைவேறி வந்தது.நேற்று முன்தினம் நிலவரப்படி, 92 லட்சம் பருத்தி பொதிகள் ஏற்றுமதிக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், அனுமதிக்கப்பட்ட 84 லட்சம் பொதிகள் ஏற்றுமதியாகி விட்டது. கூடுதலாக, எட்டு லட்சம் பருத்தி பொதிகள் பதிவாகி இருப்பது, தொழில் துறையினரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதே நிலை தொடர்ந்தால், தரமான பருத்தி இந்தியாவில் கிடைக்காத நிலை ஏற்பட்டு, வேறுநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று, தொழில் துறையினர் கவலை அடைந்தனர்.இந்நிலையில், பருத்தி ஏற்றுமதிக்கு மத்திய அரசு நேற்று முன்தினம் தடை விதித்தது. இனி, உள்நாட்டு தேவைக்கு போதுமான பருத்தி கிடைக்கும். அரசின் இந்த முடிவால், "டாஸ்மா' சங்கம் உட்பட தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேசிய பருத்தி ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா சண்முகம் கூறியதாவது:நடப்பு ஆண்டில் ஏற்றுமதி 84 லட்சம் பொதிகள் ஒதுக்கப்பட்டது. இது நான்கு மாதங்களி@ல@ய ஏற்றுமதியாகி விட்டது. இதனால், பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டுமென தொழில்துறையினர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்தே, பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் பனியன் தொழில் மிகவும் பிரச்னைக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில், பருத்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழில் காணாமல் போய்விடும். மத்திய அரசு ஏற்றுமதி வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் பட்ஜெட்டில் சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு, ராஜாசண்முகம் தெரிவித்தார்.

சரத்பவாருக்கு தெரியாதாம்!
மத்திய அரசு, உள்நாட்டு நிறுவனங்களின் நலன் கருதி பருத்தி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இது குறித்து வர்த்தக அமைச்சகம், தமக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார் புலம்பியுள்ளார்.இந்த நடவடிக்கையால் பருத்தியின் விலை சரிவடையும். இது, விவசாயிகளை மிகவும் பாதிக்கும். எனவே பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கக் கோரி, பிரதமரிடம் முறையிடுவேன் என சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)