பதிவு செய்த நாள்
08 மார்2012
23:59

புதுடில்லி: மார்ச், 1ம் தேதி வரையிலுமாக, நாட்டின் உணவு தானியங்கள் கையிருப்பு, 5 கோடியே 45 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், இருந்த கையிருப்பை விட, 18 சதவீதம் (4 கோடியே 60 லட்சம் டன்) அதிகமாகும் என, இந்திய உணவுக் கழகம் தெரிவித்துள்ளது. நடப்பு பருவத்தில் (ஜூலை-ஜூன்) கோதுமை, நெல் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்ததைத் தொடர்ந்தே, உணவு தானியங்கள் கையிருப்பு உயர்ந்துள்ளதற்கு காரணம் என கூறப்படுகிறது.நடப்பு மார்ச் மாதம், 1ம் தேதி வரையிலுமாக கையிருப்பில் உள்ள மொத்த உணவு தானியங்களில், கோதுமை கையிருப்பு, 2.13 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 1.71 கோடி டன்னாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், அரிசி கையிருப்பு, 2.96 கோடி டன்னிலிருந்து 3.31 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. அதேசமயம், குறிப்பிட்ட சில தானிய வகைகள் கையிருப்பு, 28 சதவீதம் சரிவடைந்து, 1 லட்சத்து 29 ஆயிரம் டன்னிலிருந்து 93 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது.இந்திய உணவுக் கழகம், அரிசி மற்றும் கோதுமையை, ஆண்டுதோறும், 2.12 கோடி டன் அளவிற்கு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், கோதுமை 30 லட்சம் டன், அரிசி 20 லட்சம் என மொத்தத்தில், 50 லட்சம் டன் எப்போதும் கட்டாயம் கையிருப்பில் இருக்க வேண்டும்.வேளாண் அமைச்சகம், அதன் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, நடப்பு பருவத்தில், 25 கோடி டன்னாக அதிகரிக்கும் என மதிப்பீடு செய்துள்ளது. இதில்,நெல் உற்பத்தி, 10.36 கோடி டன்னும், கோதுமை உற்பத்தி, 8.83 கோடி டன்னும் அடங்கும் என, இந்திய உணவுக் கழகம் @மலும் தெரிவித்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|