பதிவு செய்த நாள்
09 மார்2012
14:21

புதுடில்லி : பிப்ரவரி மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி 4.3 சதவீதமும், இறக்குமதி 20.6 சதவீதம் என்ற அளவிற்கு அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத்துறை செயலாளர் ராகுல் குல்லார் கூறியுள்ளார். தலைநகர் டில்லியில், பத்திரிகையாளர்களை சந்தித்த ராகுல் குல்லார் கூறியதாவது, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்திலிருந்து இந்தாண்டின் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில், ஏற்றுமதி 21.4 சதவீதம் அதிகரித்து 267.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் பதிவாகியுள்ளது. பிப்ரவரி மாதத்தில், இறக்குமதி 39.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது. நாட்டின் வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக உள்ளதாகவும், இந்த நிதியாண்டின் இறுதிக்குள், 300 பில்லியன் என்ற அளவிற்கு ஏற்றுமதி அளவு எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|