இணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்புஇணையம் மூலம் 27,000 குடும்ப அட்டைகள் புதுப்பிப்பு ... 2012-2013ம் ஆண்டிற்கான  ரயில்வே பட்ஜெட் தாக்கல் 2012-2013ம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா யுகா பைக் மே மாதம் ரிலீஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மார்
2012
11:31

ஜப்பான் நாட்டை சேர்ந்த இரு சக்கர வாகன நிறுவனமான ஹோண்டா, இந்தியாவில் காலடி எடுத்து வைத்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த நிறுவனம், இந்தியாவின் ஹீரோ குழுத்துடன் இணைந்து, 'ஹீரோ ஹோண்டா' என்ற பெயரில், வெற்றிகரமாக செயல்பட்டு வந்தது. எனினும், 27 ஆண்டுகளாக நீடித்து வந்த இந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்து விட்டது. தற்போது ஹோண்டா நிறுவனம் தனியாகவும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனியாகவும் செயல்பட்டு வருகின்றன. 'ஹீரோ ஹோண்டா' நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது அது, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பெருமையாக மாறியுள்ளது. எனினும், ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் அண்டு ஸ்கூட்டர் இந்தியா என்ற பெயரில் ஹோண்டா நிறுவனம் தனியாகவும், இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் ஈடுபட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் மிகவும் பிரபலமானது.

இந்தியாவில் என்ட்ரி லெவல் பைக் பிரிவில், ஹீரோ ஹோண்டா தான் டாப். இதன் ஸ்பெலண்டர் பைக்கை அடித்து கொள்ள ஆள் இல்லை. இந்த நிறுவனம் முதலிடத்தில் இருப்பதற்கு, இந்த பைக் தான் காரணம். இதற்கு வேட்டு வைக்க, ஹோண்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. 110 சிசி திறன் கொண்ட யுகா பைக்கை, வரும் மே மாதம் ஹோண்டா அறிமுகப்படுத்த உள்ளது. ஹோண்டா சிபி டிவிஸ்டர் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த 110 சிசி திறன் கெண்ட ஃபோர் ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் தான், யுகா பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.42 ஆயிரத்துக்குள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் இரண்டாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோவும், மூன்றாவது இடத்தில் டி.வி.எஸ்., நிறுவனமும் இருந்து வந்தன. இதில், டி.வி.எஸ்., நிறுவனத்தை பின்னுக்கு தள்ளவிட்டு, ஹோண்டா நிறுவனம் மூன்றாவது இடத்தை கைப்பற்றி விட்டது. ஃபிப்ரவரி மாத விற்பனையை கணக்கிட்டு பார்த்தால், பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களுக்கு இடையே வெறும் 7,000 பைக்குகள் தான் வித்தியாசம் காணப்படுகிறது. ஃபிப்ரவரியில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2.04 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹோண்டா நிறுவனம் 1.97 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எனவே, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தை ஹோண்டா நிறுவனம் விரைவில் பின்னுக்கு தள்ளி விட்டு இரண்டாவது இடத்தை கைப்பற்றும் என்றே கூறப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)