பதிவு செய்த நாள்
20 மார்2012
12:31
இந்தியாவில், கியர் இல்லாத ஆட்டோமேடிக் ஸ்கூட்டர்களுக்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, நகர்புற பெண்கள் இத்தகைய ஸ்கூட்டர்களையே விரும்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு, நடப்பு ஆண்டில் பல்வேறு நிறுவனங்கள், 12 ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், ஜப்பான் நாட்டை சேர்ந்த யமஹா நிறுவனம், கடந்த ஜனவரியில், டில்லியில் நடந்த வாகன கண்காட்சியில், "ரே' என்ற பெயரில் ஒரு ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்திய ஸ்கூட்டர் சந்தையில், யமஹா நிறுவனம் நுழைவது, இந்த ஸ்கூட்டர் மூலம் தான். இதன் உற்பத்தி
தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் தீபாவளி பண்டிகையை ஒட்டி, விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 100 சிசி முதல் 125 சிசி திறனுக்குள்ளாக, இந்த ஸ்கூட்டர் அமையும். எனினும், பெண்களுக்கு பிடித்த வகையில், இந்த ஸ்கூட்டரின் பெயர் மாற்றப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கரடு முரடான சாலைகளுக்கு ஏற்றவாறு, இந்த ஸ்கூட்டரின் ஃபோர்க் பகுதி அமைக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் அம்சமாக அமைந்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|