உலக உருக்கு உற்பத்தி 12 கோடி டன் உலக உருக்கு உற்பத்தி 12 கோடி டன் ... டில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறது டில்லியிலும் பெட்‌ரோல் விலை குறைகிறது ...
நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில்... கூடுதலாக 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2012
00:11

புதுடில்லி,: நடப்பு சர்க்கரை பருவத்தில் (அக்டோபர்-செப்டம்பர்), கூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய, மத்திய அமைச்சரவை குழு அனுமதி அளித்துள்ளது. பொது உரிமம் அடிப்படையில், இந்த 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.நடப்பு சர்க்கரை பருவத்தில், இதுவரை, 20 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 30 லட்Œம் டன் ஏற்றுமதிதற்போது, கூடுதலாக 10 லட்சம் டன் ஏற்றுமதி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து, நடப்பு பருவத்தில், மொத்த சர்க்கரை ஏற்றுமதி, 30 லட்சம் டன்னாக இருக்கும். கடந்த சர்க்கரை பருவத்தில், பொது உரிமம் அடிப்படையில், 26 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு 2011-12ம் சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) மதிப்பீடு செய்துள்ளது. கடந்த சர்க்கரை பருவத்தில் நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருந்தது.அதேசமயம், மத்திய உணவு அமைச்சகத்தின் மறுமதிப்பீட்டின் படி, நடப்பு சர்க்கரை பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.52 கோடி டன்னாக இருக்கும் என்றும், முதல் மதிப்பீட்டில், இது, 2.46 கோடி டன்னாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது.மத்திய அரசு, நடப்பு சர்க்கரை பருவத்தில், ஒட்டுமொத்த அளவில், 30 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளது. அதிகளவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதால், உள்நாட்டில் சர்க்கரை விலை உயர வாய்ப்பில்லை என எதிர்பார்க்கப்படுகிறது. சர்க்கரை கையிருப்புஏனெனில், உள்நாட்டில், சர்க்கரைக்கான தேவை, 2.20 கோடி டன் என்றளவில் தான் உள்ளது. ஏற்றுமதி செய்த நிலையிலும், சர்க்கரை கையிருப்பு, போதிய அளவிற்கு இருக்கும் என்ற மதிப்பீட்டால், இதன் விலை உயராது என, சர்க்கரை துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.உலகளவில், சர்க்கரை உற்பத்தியில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில், கரும்பு உற்பத்தியில் ஈடுபட்டு வரும், மாநிலங்களில், இதன் உற்பத்தி கடந்த ஆண்டை விட, நல்ல அளவில் அதிகரித்துள்ளது.நிலுவைத் தொகைகூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளித்துள்ளதால், சர்க்கரை ஆலை நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கரும்பிற்கான, நிலுவை தொகையை உடனடியாக அளிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்ற பிப்ரவரி 29ம் தேதி நிலவரப்படி, சர்க்கரை ஆலை நிறுவனங்கள், விவசாயிகளுக்கு கரும்பை கொள்முதல் செய்த வகையில், 8,450 கோடி ரூபாய் அளவிற்கு நிலுவை தொகை வைத்துள்ளன. ஏற்றுமதியின் வாயிலாக சர்க்கரை ஆலைகளுக்கு, ஒரு கிலோ சர்க்கரை விற்பனையின் மூலம் 2.50-3 ரூபாய் அளவிற்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இத்தொகையைக் கொண்டு, சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகையை விவசாயிகளுக்கு அளிக்க முடியும் என "இஸ்மா' அமைப்பின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.கூடுதலாக, 10 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதற்கு, "இஸ்மா' அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அதேசமயம், மார்ச் மாத இறுதிக்குள் அனுமதிக்கப்பட்ட சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான், சர்க்கரை ஆலைகள், பருவம் முடிவதற்குள் அதாவது, ஏப்ரல் மாத இறுதிக்குள், அதிகளவில் மூலச் சர்க்கரையை உற்பத்தி செய்ய முடியும் என இச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து ... மேலும்
business news
மும்பை : ‘யூட்டிலிட்டி வெகிக்கிள்’ எனும், பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என, ‘பிட்ச் ... மேலும்
business news
புதுடில்லி : மூன்று ஆண்டுகளுக்கு பின், மீண்டும் வானில் பறக்க உள்ளன ‘ஜெட் ஏர்வேஸ்’ விமானங்கள். ஜெட் ஏர்வேஸ் ... மேலும்
business news
உலகலாவிய தொழில்நுட்ப பிராண்டான ஒன் பிளஸ், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் மிகவும் அணுகக்கூடிய 5ஜி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)