உற்பத்தி வரி அதிகரிப்பால் கம்ப்யூட்டர் விலை உயரும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -உற்பத்தி வரி அதிகரிப்பால் கம்ப்யூட்டர் விலை உயரும் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் ... ... நடப்பாண்டு பிப்ரவரியில்... எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் நடப்பாண்டு பிப்ரவரியில்... எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 6.8 சதவீதம் ...
வர்த்தகம் » ஜவுளி
ஆயத்த ஆடை ஏற்றுமதி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2012
00:07

புதுடில்லி:நாட்டின் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, சென்ற பிப்ரவரி மாதத்தில், 128 கோடி டாலராக (6,400 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 1.5 சதவீதம் அதிகம் என, ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சர்வதேச பொருளாதார மந்த நிலையால், இந்திய ஆயத்த ஆடை இறக்குமதியில், 80 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், இதன் தேவை வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது, பொருளாதார மந்த நிலையிலிருந்து அமெரிக்கா, இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. இதனால், வரும் மாதங்களில், இந்தியாவிலிருந்து, ஆயத்த ஆடைகளை அமெரிக்கா அதிக அளவில் இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.பாரம்பரிய சந்தைகளில் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையிலும், புதிய சந்தைகளாக கண்டறியப்பட்டுள்ள ஜப்பான், மேற்கு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்றவற்றுக்கு ஆயத்த ஆடைகள் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான 11 மாத காலத்தில், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி, 1,210 கோடி டாலராக (60 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 19 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)