பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:24

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 23ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 31.86 கோடி டாலர் (1,593 கோடி ரூபாய்) உயர்ந்து, 29 ஆயிரத்து 514 கோடி டாலராக (14 லட்சத்து 75 ஆயிரத்து 700 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, இதற்கு முந்தைய வாரத்தில், 86.20 கோடி டாலர் (4,310 கோடி ரூபாய்) உயர்ந்து, 29 ஆயிரத்து 482 கோடி டாலராக (14 லட்சத்து 74 ஆயிரத்து 100 கோடி ரூபாய்) அதிகரித்திருந்தது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதே வாரத்தில், அன்னியச் செலாவணிகளின் சொத்து மதிப்பு, 25.12 கோடி டாலர் உயர்ந்துள்ளது. சர்வதேச நிதியத்தில், நம் நாடு வைத்துள்ள செலாவணிகளின் மதிப்பு, 282.30 கோடி டாலராக அதிகரித்துள்ளது.அமெரிக்க டாலருக்கு எதிரான யூரோ, உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகளின் வெளி மதிப்பு மாறுபட்டதையடுத்து, கையிருப்பில் உள்ள செலாவணிகளின் மதிப்பு அதிகரித்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|