பதிவு செய்த நாள்
01 ஏப்2012
10:54

புதுடில்லி: ரயில்வே பட்ஜெட்டில் உயர்த்தி அறிவிக்கப்பட்ட, "ஏசி' முதல் வகுப்பு, "ஏசி' இரண்டாம் வகுப்பு, எக்சிக்யூட்டிவ் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. இன்று முதல் பயணம் செய்பவர்கள், ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தால், அவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இன்று முதல் துவங்கும் 2012-13ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஏசி' முதல்வகுப்பு, "ஏசி' இரண்டாம் வகுப்பு, எக்சிக்யூட்டிவ் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் "ஏசி' மூன்றாம் வகுப்பு, தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு, புறநகர் ரயில் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தி, ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி அறிவித்தார்.
இதற்கு அவர் சார்ந்துள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி உட்பட பல அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. மம்தா பானர்ஜியின் எதிர்ப்பு காரணமாக, தினேஷ் திரிவேதி பதவி விலகினார். புதிய ரயில்வே அமைச்சராக அதே கட்சியைச் சேர்ந்த முகுல்ராய் பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்றதும், தினேஷ் திரிவேதி அறிவித்த ரயில் கட்டண உயர்வுகளில், "ஏசி' முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, எக்சிக்யூட்டிவ் வகுப்பு ஆகியவற்றின் கட்டணங்களைத் தவிர, பிற கட்டண உயர்வுகளை வாபஸ் பெற்றார்.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட "ஏசி' முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு, எக்சிக்யூட்டிவ் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி, "ஏசி' முதல் வகுப்பில் பயணிக்க ஒரு கி.மீட்டருக்கு 30 பைசாவும், "ஏசி' இரண்டாம் வகுப்புக்கு ஒரு கி.மீட்டருக்கு 15 பைசாவும், முதல் வகுப்புக்கு ஒரு கி.மீ.,க்கு 10 பைசாவும் அதிகரிக்கும். சீசன் டிக்கெட் இனிமேல் அதிகபட்சமாக, 150 கி.மீ., தூரத்திற்கு மட்டுமே பெற முடியும். தற்போது முதல் வகுப்பு சீசன் டிக்கெட் பத்து கி.மீ., தூரத்திற்கு 240 ரூபாயாக உள்ளது. இன்று முதல் இது, 255 ரூபாயாக உயரும். புதிய கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதால், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். அவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் தொகையை, ரயிலில் பயணிக்கும்போது, டிக்கெட் பரிசோதகர் பெற்றுக் கொள்வார். உயர்த்தப்பட்டுள்ள கட்டண விவரங்கள், அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|