பதிவு செய்த நாள்
01 ஏப்2012
12:14

தூத்துக்குடி: தூக்குடி- கொழும்பு இடையே ஏப்ரல்.19-ம் தேதி முதல் மீ்ண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என துறைமுக பொறுப்புக்கழக தலைவர் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உசி. துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், அதன் தலைவர் சுப்பையா கூறியதாவது:தூத்துக்குடி துறைமுகம் இந்தாண்டு 281 லட்சம் டன் சரக்குகள் கையாண்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. அது கடந்த நவம்பர் மாதம் 18-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. இதற்கு தொழி்ல்நுட்ப கோளாறு மற்றும் எரிபொருள் காரணம் ஆகும். தற்போது இதனை மீண்டும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதிமுதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் 450 பேர் பயணிக்க முடியும். வாரம் இருமுறை (செவ்வாய், வியாழன்)ஆகிய கிழமைகளில் இயக்கப்பட உள்ளது என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|