பதிவு செய்த நாள்
06 ஏப்2012
00:09

மும்பை: மார்ச் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைந்த 15 தினங்களில், வங்கிகள் வழங்கிய கடன் 16.8 சதவீதம் என்றளவில் அதிகரித்து, 45 லட்சத்து 30 ஆயிரத்து 326 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய 15 தினங்களில், 16.1 சதவீதம் என்றளவில் உயர்ந்திருந்தது. வங்கிகள் வழங்கிய கடன் அதிகரித்துள்ளது என்றாலும், இதே 15 தினங்களில் வங்கிகள் திரட்டிய டெபாசிட், 13.4 சதவீதம் மட்டும் வளர்ச்சி கண்டு, 59 லட்சத்து 3 ஆயிரத்து 659 கோடி ரூபாயாக இருந்தது.மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், வங்கிகள் வழங்கிய கடன், 16.9 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, ரிசர்வ் வங்கி, நிர்ணயித்திருந்த 16 சதவீத மதிப்பீட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.பொருளாதார மந்த நிலை மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்றவற்றால், வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்துள்ளது.வங்கிகளுக்கு போதிய அளவிற்கு நிதி ஆதாரம் இல்லாததால், பல வங்கிகள் குறைந்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பெடரல் பேங்க் ஆகிய வங்கிகள், குறைந்த கால டெபாசிட்டிற்கான வட்டியை உயர்த்தியுள்ளன. குறிப்பாக, எஸ்.பீ.ஐ. குறைந்த கால டெபாசிட்டிற்கான வட்டியை 1 சதவீதம் உயர்த்தியுள்ளது. பெடரல் பேங்க், ஓராண்டு காலத்திற்கான, குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி 10 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று பேங்க் ஆப் பரோடாவும் குறைந்த கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|