பதிவு செய்த நாள்
06 ஏப்2012
11:37

லண்டன்: உலகம் முழுவதும் அனைத்து மக்களால் விரும்பி சுவைக்கப்படும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை உயர்வால் இந்தாண்டு அதன் விலை அதிகரிக்ககூடு்ம் என எதிர்பார்க்கப்படுவதாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மெக்சிகோ, மடகாஸ்கர் , இந்தியா போன்ற நாடுகளில் வசிக்கும் மக்கள் அதிகளவில் வெண்ணிலா வகை ஐஸ்கிரீமையே விரும்பி சுவைக்கின்றனர். இந்த வெண்ணிலா மூலப்பொருளின் உற்பத்தி குறைந்து காணப்படுவதாலும், விலை இந்தாண்டு கிலோ ஒன்றிற்கு 25 டாலர் முதல் 30 டாலர் அளவிற்கு அதிகரித்துள்ளதாலும் விலையேற்றம் இருக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மடகாஸ்கர் நாட்டில் மட்டும் ஆண்டு ஒன்றிற்கு 2ஆயிரம் டன் அளவிற்கு வெண்ணிலா மூலப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் வெண்ணிலா மூலப்பொருள் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்கு மட்டுமல்லாது மருத்துவ பயன்பாட்டிற்கும் , வாசனை திரவியம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படு்கிறது என்பது குறிப்பிடத்தக்கது..
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|