பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:53

புதுடில்லி,: சென்ற 2011-12ம் நிதியாண்டில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 1 லட்சத்து 14 ஆயிரத்து 233 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், திரட்டப்பட்டதைவிட, 9.2 சதவீதம் (1 லட்சத்து
25 ஆயிரத்து 826 கோடி ரூபாய்) குறைவாகும் என, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் (இரிடா) தெரிவித்துள்ளது.எல்.ஐ.சி. நிறுவனம்:இந்தியாவில், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தில், பொதுத் துறையில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்.ஐ.சி.) நிறுவனமும், தனியார் துறையில், 23 நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இதில், 74 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டு, எல்.ஐ.சி.நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.கடந்த நிதியாண்டில், எல்.ஐ.சி., நிறுவனம், முதல் ஆண்டு பிரிமிய வருவாயாக, 81 ஆயிரத்து 514 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 86 ஆயிரத்து 445 கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது. ஆக, முந்தைய நிதியாண்டை விட, இந்நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 6.05 சதவீதம் சரிவடைந்துள்ளது.
தனியார் நிறுவனங்கள்:மதிப்பீட்டு காலத்தில், தனியார் துறையைச் சேர்ந்த, 23 காப்பீட்டு நிறுவனங்கள், திரட்டிய பிரிமிய வருவாய், ஒட்டு மொத்த அளவில், 16.9 சதவீதம் குறைந்து, 32 ஆயிரத்து 718 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இருப்பினும், இதில், மெட் லைப் நிறுவனத்தின், புதிய பிரிமிய வருவாய், 52.7 சதவீதம் வளர்ச்சிகண்டு, 704 கோடியிலிருந்து, 1,075 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.டீ.எல்.எப். பிரமெரிக்கா நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 38.9 சதவீதம் உயர்ந்து, 103 கோடி ரூபாயாகவும், ஸ்டார் யூனியன் டாய்ச் நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 27.18 சதவீதம் அதிகரித்து, 965 கோடி ரூபாயாகவும், இந்தியா பர்ஸ்ட் நிறுவனத்தின் வருவாய், 39.38 சதவீதம் உயர்ந்து, 982 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்களிடம் வரவேற்பிழந்த ஓய்வூதியம் மற்றும் பங்கு சார்ந்த புதிய காப்பீட்டு திட்டங்கள், அறிமுகம் செ#வது குறைந்து போனது. இதுவும், ஆயுள் காப்பீட்டு வர்த்தகத்தின் சரிவு நிலைக்கு முக்கிய காரணம் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.பொது காப்பீடு:இந்தியாவில், பொதுக் காப்பீட்டுத் துறையில், நான்கு பொதுத் துறை நிறுவனங்களும், 20 தனியார் துறை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவை, மோட்டார் வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு, தீ விபத்து, புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புகளுக்காக, காப்பீட்டுத் திட்டங்களை வழங்கி வருகின்றன.
பொது காப்பீட்டு பிரிவின் கீழ், பல்வேறு காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன என்றாலும், இத்துறை நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாயில், மோட்டார் வாகன காப்பீட்டின் பங்களிப்பே அதிகளவில் உள்ளது.வாகன காப்பீடு:இதையடுத்து, நடப்பாண்டில், பொது காப்பீட்டு நிறுவனங்கள், மோட்டார் வாகன காப்பீட்டு பிரிமிய கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதனால், கார், லாரி, வர்த்தக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் கூடுதலாக பிரிமியம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மோட்டார் வாகன காப்பீட்டு துறை, நிறுவனங்கள் சந்தித்து வரும் இழப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு, மூன்றாம் நபர் காப்பீட்டு பிரிமியம், 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்றாம் நபர் காப்பீடு:இதனால், 1,000 சி.சி. இன்ஜின் திறன் கொண்ட கார் உரிமையாளர்கள், மூன்றாம் நபர் வாகன காப்பீட்டின் கீழ், 784 ரூபாய் பிரிமியம் செலுத்த வேண்டும். 1,000 சி.சி. இன்ஜின் திறனுள்ள வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம், 925 ரூபாயாக உள்ளது. 1,500 சி.சி.இன்ஜின் திறனுள்ள வாகனங்களுக்கான காப்பீட்டு பிரிமியம், 2,853 ரூபாய் ஆக உள்ளது.சென்ற நிதியாண்டில், பொது துறை காப்பீட்டு நிறுவனங்கள், பிரிமிய வருவாயாக, 58 ஆயிரத்து 344 கோடி ரூபாயை வசூலித்துள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் வசூலிக்கப்பட்டதை விட, 23.2 சதவீதம் (47 ஆயிரத்து 373 கோடி ரூபாய்) அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|