பதிவு செய்த நாள்
21 ஏப்2012
06:57

சென்னை: வாடியா குழுமத்தைச் சேர்ந்த கோ ஏர்லைன்ஸ் நிறுவனம், "கோ ஏர்' என்ற பெயரில், விமானச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், சென்னையிலிருந்து புதிய விமான சேவையை துவங்க உள்ளது.சென்னையிலிருந்து...இதுகுறித்து, இதன் தலைமை செயல் அதிகாரி ஜியார்ஜியோ டி ரோனி கூறியதாவது:நிறுவனம், உள்நாட்டில், குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வருகிறது. வரும், மே 1ம் தேதி முதல் சென்னையிலிருந்து, புதிய விமான சேவை துவங்கப்படுகிறது.
இதையடுத்து, நாள்தோறும் சென்னை-மும்பை வழித்தடங்களில், இரண்டு விமான சேவைகளும், சென்னை-பூனே இடையே ஒரு சேவையும், சென்னை-போர்ட் பிளேர் இடையே வாரத்திற்கு ஐந்து சேவைகளும் வழங்கப்படும்.கூடுதல் விமானங்கள் தற்போது, நிறுவனத்திற்கு, 11 விமானங்கள் உள்ளன. நடப்பு நிதியாண்டில், @மலும், மூன்று விமானங்கள் இயக்கப்படும். சென்ற நிதியாண்டில், நிறுவனத்தின் விமானங்களில், 40 லட்சம் பேர் பயணம் செ#தனர். இதனை, இவ்வாண்டு, 50 லட்சமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|