பதிவு செய்த நாள்
21 ஏப்2012
07:00

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 87 ஆயிரத்து 833 கோடி ரூபாயை விற்றுமுதலாக பெற்றுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே காலாண்டை விட, 16.7 சதவீதம் அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 21.2 சதவீதம் குறைந்து, 5,376 கோடியிலிருந்து, 4,236 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.சென்ற முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் விற்றுமுதல், முந்தைய நிதியாண்டை விட,
31.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 39 ஆயிரத்து 792 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் ஏற்றுமதி, 41.8 சதவீதம் அதிகரித்து, 2 லட்சத்து 8 ஆயிரத்து 42 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்நிறுவனத்தின் மொத்த லாபம், 3.3 சதவீதம் குறைந்து, 39 ஆயிரத்து 812 கோடி ரூபாயாகவும், நிகர லாபம், 1.2 சதவீதம் குறைந்து, 20 ஆயிரத்து 40 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.இந்நிறுவனம் சென்ற நிதியாண்டிற்கு, அதன் பங்குதாரர்களுக்கு 85 சதவீத டிவிடெண்டை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, ரூ. 10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 8.50 ரூபாய் டிவிடெண்டு கிடைக்கும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|