பதிவு செய்த நாள்
28 ஏப்2012
00:04

புதுடில்லி:நடப்பு 2012ம் ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலத்தில், உள்நாட்டிற்குள் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 1.53 கோடியாக அதிகரித்துள்ளது. இது, 6.55 சதவீத வளர்ச்சி என, மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் அஜித்சிங் பார்லிமென்டில் தெரிவித்தார்.கடந்த 2008ம் ஆண்டில், உள்நாட்டில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 4.13 கோடியாகவும், 2009ம் ஆண்டில், இந்த எண்ணிக்கை, 4.39 கோடியாகவும் இருந்தது.
இந்தியாவில், விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களில், அயல்நாடுகளைச் சேர்ந்த, 500 விமானிகள் பணிபுரிந்து வருகின்றனர். உள்நாட்டில், போதிய அளவிற்கு விமானிகள் இல்லாததால், அயல்நாட்டு விமானிகள் இங்கு பணிபுரிய அரசு அனுமதி அளித்துள்ளது.மேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தான், அதிகளவில் வெளிநாட்டு விமானிகள் பணிபுரிகின்றனர் என, அமைச்சர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|