பதிவு செய்த நாள்
02 மே2012
00:13
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 265 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 20.6 சதவீதம் (334 கோடி ரூபாய்) குறைவாகும்.இருப்பினும், இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 29.23 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,532 கோடியிலிருந்து, 4,565 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், இவ்வங்கியின் நிகர லாபம் 1,142 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டை விட, 24 சதவீதம் (1,503 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே நிதியாண்டுகளில், இவ்வங்கியின் மொத்த வருவாய், 30.71 சதவீதம் வளர்ச்சி கண்டு, 13 ஆயிரத்து 48 கோடியிலிருந்து, 17 ஆயிரத்து 55 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|