பதிவு செய்த நாள்
02 மே2012
00:18
மும்பை:நுகர்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், இந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் (எச்.யூ.எல்.), மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 687 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டு இதே காலண்டை விட, 20.63 சதவீதம் (569 கோடி ரூபாய்) அதிகமாகும்.இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 4,894 கோடியிலிருந்து, 5,660 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2011-12ம் முழு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த நிகர லாபம், 2,800 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 2,307 கோடி ரூபாயாக இருந்தது.இதே நிதியாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 19 ஆயிரத்து 648 கோடியிலிருந்து, 22 ஆயிரத்து 988 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு, 1 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 4 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் 3.50 ரூபாயை இடைக்கால டிவிடெண்டாக வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|