எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு உயரும்எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு உயரும் ... டிஜிட்டல்மயமாகிறது கேபிள் டிவி : 100 ரூபாய்க்கு 100 சேனல்கள் டிஜிட்டல்மயமாகிறது கேபிள் டிவி : 100 ரூபாய்க்கு 100 சேனல்கள் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வாகனங்கள் விற்பனை, ஏற்றுமதி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மே
2012
00:26

புதுடில்லி:சென்ற ஏப்ரல் மாதத்தில், முன்னணியில் உள்ள பல நிறுவனங்களின் மோட்டார் வாகனங்கள் விற்பனை சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மூலப் பொருட்களின் விலை உயர்வு,வட்டி செலவினம் அதிகரிப்பு, போன்றவற்றால் மோட்டார் வாகன துறை நிறுவனங்களின் லாப வரம்பு குறைந்துள்ளது. இருப்பினும், விற்பனை வளர்ச்சி கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மாருதி சுசூகி இந்தியா:சென்ற ஏப்ரல் மாதத்தில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 1 லட்சத்து 415 கார்களை விற்பனை செய்துள்ளது.
இது, கடந்த ஆண்டு, இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட 3.4 சதவீதம் (97 ஆயிரத்து 155 கார்கள்) அதிகமாகும்.உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை, 3.6 சதவீதம் வளர்ச்சி கண்டு, 87 ஆயிரத்து 144 லிருந்து, 90 ஆயிரத்து 255 ஆக அதிகரித்துள்ளது.இதே காலத்தில், கார் ஏற்றுமதி, 1.5 சதவீதம் அதிகரித்து,10 ஆயிரத்து 11 என்ற எண்ணிக்கையிலிருந்து, 10 ஆயிரத்து 160 ஆக அதிகரித்துள்ளது.மொத்த பயணிகள் கார் விற்பனை 1.3 சதவீதம் குறைந்து, 73 ஆயிரத்து 905 லிருந்து, 72 ஆயிரத்து 939 ஆக சரிவடைந்துள்ளது.எம்800, ஏ-ஸ்டார், ஆல்டோ, வேகன் ஆர் உள்ளிட்ட சிறிய வகை கார்களின் விற்பனை 26.4 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதே சமயம் எஸ்டிலோ, ஸ்விப்ட், ரிட்ஸ் உள்ளிட்ட நடுத்தர வகை கார்களின் விற்பனை, 43 சதவீதம் அதிகரித்து, 26 ஆயிரத்து 72 ஆக உயர்ந்துள்ளது.
டாட்டா மோட்டார்ஸ்:சென்ற ஏப்ரலில், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 7 சதவீதம் குறைந்து, 60 ஆயிரத்து 86 என்ற அளவில் உள்ளது.உள்நாட்டு பயணிகள் கார் விற்பனை 7 சதவீதம் குறைந்து, 25 ஆயிரத்து 436 என்ற எண்ணிக்கையிலிருந்து, 23 ஆயிரத்து 658 ஆக சரிவடைந்துள்ளது.இந்நிறுவனத்தின் 'நானோ' கார் விற்பனை 20 சதவீதம் சரிவடைந்து, 10 ஆயிரத்து 12 என்ற எண்ணிக்கையிலிருந்து, 8 ஆயிரத்து 28 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், 'இண்டிகா' கார் விற்பனை 63 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,250 என்ற எண்ணிக்கையிலிருந்து, 6,913 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனத்தின் உள்நாட்டு வர்த்தக வாகனங்கள் விற்பனை 6 சதவீதம் சரிவடைந்து, 36 ஆயிரத்து 738 என்ற எண்ணிக்கையிலிருந்து, 34 ஆயிரத்து 647 ஆக குறைந்துள்ளது. சென்ற ஏப்ரல் மாதத்தில், இந்நிறுவனத்தின் மொத்த வாகனங்கள் ஏற்றுமதி 35 சதவீதம் சரிவைக் கண்டு, 2,781 ஆக உள்ளது.மகிந்திரா அண்டு மகிந்திரா:மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை, 27 சதவீதம் அதிகரித்து, 40 ஆயிரத்து 719 ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 32 ஆயிரத்து 90 ஆக இருந்தது.
உள்நாட்டில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை 29 சதவீதம் உயர்ந்து, 30 ஆயிரத்து 349 என்ற எண்ணிக்கையிலிருந்து, 39 ஆயிரத்து 299 ஆக அதிகரித்துள்ளது.இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனை, 4,411லிருந்து, 4,659 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர, நான்கு சக்கர வர்த்தக வாகனங்களின் விற்பனை 9,538லிருந்து, 13 ஆயிரத்து 54 ஆக வளர்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், இந்நிறுவனத்தின் வாகன ஏற்றுமதி, 1,741லிருந்து, 1,420 ஆக சரிவடைந்துள்ளது.
டொயோட்டா கிர்லோஸ்கர்:மதிப்பீட்டு மாதத்தில், டெயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், 14 ஆயிரத்து 378 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 49 சதவீதம் (9,681 கார்கள்) அதிகமாகும். எடியோஸ் (5,624 கார்கள்), நியூ இன்னோவா (6,582 கார்கள்), நியூ பார்சுனர் (1,270 கார்கள்), கோரல்லா ஆல்டிஸ் (881 கார்கள்) ஆகியவை ஏப்ரல் மாத விற்பனையில் முக்கிய பங்களிப்பை கொண்டுள்ளன.
டி.வி.எஸ். மோட்டார்:டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு வாகனங்கள் விற்பனை, 1 லட்சத்து 51 ஆயிரத்து 181 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 7 சதவீதம் (1 லட்சத்து 41 ஆயிரத்து 619 வாகனங்கள்) அதிகமாகும். ஒட்டு மொத்த வாகன விற்பனை 4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1 லட்சத்து 74 ஆயிரத்து 455 (1 லட்சத்து 67 ஆயிரத்து 744 ) ஆக உயர்ந்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை 4 சதவீதம் அதிகரித்து, 1 லட்சத்து 71 ஆயிரத்து 551 (1 லட்சத்து 64 ஆயிரத்து 183) ஆக அதிகரித்துள்ளது.
வாகன ஏற்றுமதி, 25 ஆயிரத்து 275லிருந்து, 22 ஆயிரத்து 272 ஆக சரிவடைந்துள்ளது. மேலும், இருசக்கர வாகன ஏற்றுமதியும் 22 ஆயிரத்து 564லிருந்து, 20 ஆயிரத்து 370 ஆக குறைந்துள்ளது.இது தவிர, இந்நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன விற்பனையும் 3,561லிருந்து, 2,904 ஆக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)