பதிவு செய்த நாள்
05 மே2012
01:35

மும்பை:இந்திய நிறுவனங்கள், சென்ற மார்ச் மாதத்தில், வெளிநாட்டு வர்த்தக கடன் மற்றும் அன்னியச் செலாவணியில் பங்குகளாக மாறக்கூடிய கடன் பத்திரங்கள் வாயிலாக, 384 கோடி டாலரை (19 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) திரட்டிக் கொண்டுள்ளன.
வட்டி விகிதம்:இது, பிப்ரவரி மாதத்தில், திரட்டியதை விட, 48 சதவீதம் (260 கோடி டாலர்-13 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இந்தியாவை காட்டிலும், பல்வேறு நாடுகளில், வட்டி விகிதம் குறைவாக உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெறும் வகையில், பல இந்திய நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை, அந்நாடுகளிலிருந்து திரட்டிக் கொள்கின்றன.
மதிப்பீட்டு மாதத்தில், திரட்டப்பட்ட மொத்தக் கடனில், ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சாசன் பவர், மங்களூர் ரிபைனரி மற்றும் பெட்ரோகெமிக்கல் (எம்.ஆர்.பி.), பூஷன் ஸ்டீல், ஐடியா செல்லூலார், அதானி பவர் ராஜஸ்தான், ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் கடன்களைத் திரட்டி கொண்டுள்ளன.ரிசர்வ் வங்கி:வெளி நாடுகளிலிருந்து திரட்டிய மொத்த கடனில், ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி கடன் பெறும் பிரிவின் கீழ், 320 கோடி டாலரும் (16 ஆயிரம் கோடி ரூபாய்), ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 64 கோடி டாலரும் (3,200 கோடி ரூபாய்) திரட்டி கொள்ளப்பட்டன.
ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன், அதன் மின் திட்டங்களை செயல்படுத்துவதற்காக, இரண்டு கட்டங்களாக, 45 கோடி டாலரை (2,250 கோடி ரூபாய்), ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் கடன் பெறக்கூடிய பிரிவின் கீழ் திரட்டி கொள்ளப்பட்டுள்ளது.ரிசர்வ் வங்கியின் அனுமதியின்றி கடன் பெறும் பிரிவின் கீழ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பொறியியல் சாதனங்களை இறக்குமதி செய்து கொள்வதற்காக, 39 கோடி டாலரை திரட்டிக் கொண்டுள்ளது.
ஐடியா செல்லுலார் :இதே பிரிவின் கீழ், பூஷன் ஸ்டீல் (29 கோடி டாலர்), எம்.ஆர்.பி. (25 கோடி டாலர்) ஆகிய நிறுவனங்களும் கடன்களை திரட்டி கொண்டுள்ளன.மேலும், ஐடியா செல்லுலார் (15 கோடி டாலர்), அதானி பவர் ராஜஸ்தான் (14.50 கோடி டாலர்), ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா (13.30 கோடி டாலர்) போன்ற நிறுவனங்களும் அயல்நாடுகளில் இருந்து கடன்களை திரட்டி கொண்டுள்ளன.
அயல்நாடுகளில் @மற்கொண்ட முதலீடு 276 கோடி டாலர்:நடப்பு ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய நிறுவனங்கள் அயல் நாடுகளில் மேற்கொண்ட முதலீடு, 276 கோடி டாலராக (14 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.மேற்கண்ட மொத்த முதலீட்டில், இந்திய நிறுவனங்கள், அயல் நாடுகளில் மேற்கொண்ட உத்தரவாத முதலீடு 176 கோடி டாலராகவும் ( 8,800 கோடி ரூபாய்), பங்கு முதலீடு, கூட்டுத்திட்டங்கள் மற்றும் துணை நிறுவனங்களில் மேற்கொண்ட முதலீடு, 59.60 கோடி டாலராகவும் (2,980 கோடி ரூபாய்) உள்ளன. இவை தவிர, அயல்நாடுகளில், கடன்கள் வாயிலாக 31.20 கோடி டாலர் (1,560 கோடி ரூபாய்) முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்ற ஏப்ரலில், அயல்நாடுகளில் முதலீடு மேற்கொண்ட பல நிறுவனங்களுள், அதிகளவில் முதலீடு செய்ததில், அதானி குழுமம், ஆஸ்திரேலியாவில் 136 கோடி டாலரையும் (6,800 கோடி ரூபாய்), போர்டிஸ் குழுமம், சிங்கப்பூரில் 9 கோடி டாலரையும் (450 கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|