பதிவு செய்த நாள்
20 மே2012
14:03

2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வசானை திரவியங்களின் உற்பத்தி ரூ.10 ஆயிரம் கோடியை எட்டும் என்று அசோசேம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு கூறியுள்ளதாவது, தற்போது இந்தியாவில் வாசனை திரவியங்களின் உற்பத்தி ரூ.3,700 கோடியாக இருக்கிறது. இந்தியாவில் டியோடரண்ட், பர்ப்யூம் என்று பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றனர். இதில் டியோடரண்ட்களின் உற்பத்தி ரூ.1,800 கோடி என்றும், இது 55சதவீதம் வளர்ச்சி கண்டு வருவதாகவும், பர்ஃப்யூம் தொழிலகங்களின் உற்பத்தி மதிப்பு தற்போது ரூ. 1,500 கோடியாக உள்ளது என்றும், இது ஆண்டுக்கு 30 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாகவும் தெரிவித்து இருக்கிறது. மேலும் சிறு மற்றும் பெரு நகரங்களில் வசானை திரவியங்களின் விற்பனையும் அதிகரித்து வருவதாகவும், ரூ.3,700 கோடியாக இருக்கும் உற்பத்தி 2015ம் ஆண்டிற்குள் ரூ.10 ஆயிரம் கோடியாக எட்டும் என்று தெரிவித்து இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|