பதிவு செய்த நாள்
22 மே2012
00:31

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்படும் என்ற சீன பிரதமரின் அறிவிப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்தது. இதன் தாக்கம் இந்தியப் பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
இருப்பினும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவு, ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடன் பிரச்னை போன்றவை பங்கு வர்த்தகத்தில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கடைசி 30 நிமிட வர்த்தகத்தில், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை குறைந்து போனது.
நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், ரியல் எஸ்டேட், வங்கி, பொறியியல், மின்சாரம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், நுகர் பொருட்கள் உள்ளிட்ட ஒரு சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 30.51 புள்ளிகள் அதிகரித்து, 16,183.26 புள்ளிகளில் நிலைகொண்டது.
வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,298.39 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,149.61 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள்,16 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 14 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 14.60 புள்ளிகள் உயர்ந்து, 4,906.05 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,937.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 4,888.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|