பதிவு செய்த நாள்
28 மே2012
10:55

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.03 புள்ளிகள் அதிகரித்து 16329.85 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 34.20 புள்ளிகள் அதிகரித்து 4954.60 புள்ளிகளோடு காணப் பட்டது. பங்கு வர்த்தகம், நடப்பு வாரத்தில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. என்றாலும், வார இறுதியில், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. ஒரு சில நிறுவனங்களின், கடந்த நிதியாண்டிற்கான, நிதி நிலை முடிவுகள், திருப்திகரமாக இருந்தது. இந்நிலையில், கடுமையாக சரிவடைந்து வந்த, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, வீழ்ச்சியில் இருந்து, ஓரளவிற்கு மீண்டது. பெட்ரோல் விலை, அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பல பொருட்களின் விலை உயரும். இருப்பினும், பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால், எண்ணெய், எரிவாயு ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.05ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|