பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
01:05

புதுடில்லி:கடந்த வாரம், மத்திய வேளாண் அமைச்சகம், வரும் 2012-13ம் வேளாண் பருவத்தில், ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை,நடப்பாண்டை விட,15 சதவீதம் அதிகரித்து,1,250ரூபாயாக உயர் த்த வேண்டும் என, பரிந்துரை செய்தது. இதற்கு, மத்திய உணவு அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மானிய சுமை:நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தால், அது அரசின் மானியச் சுமையை மேலும் அதிகரித்து விடும். எனவே, நடப்புப் பருவத்திற்கு வழங்கப்பட்ட அதே அளவிற்கே, நெல்லுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கப்பட வேண்டும் என, உணவு அமைச்சகம்தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், வேளாண் துறை, ஒரு குவிண்டால் உயர்வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 1,280 ரூபாயாகவும், சாதாரண வகை நெல்லுக்கான விலையை,1,250 ரூபாயாகவும் உயர்த்தும் வகையில்,பரிந்துரை செய் திருந்தது.நடப்பு பருவத்தில், ஒரு குவிண்டால் உயர்வகை நெல்லுக்கான ஆதரவு விலை,1,110 ரூபாயாகவும், சாதாரண வகை நெல்லுக்கு, 1,080 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் வேளாண் பருவத்தில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, வேளாண் துறை பரிந் துரைப்படி உயர்த்தினால், அது, உணவு மானியச் சுமையில், ஒட்டுமொத்த அளவில், கூடுதலாக,15 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்து விடும்.
கூடுதல் செலவு:மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், உணவு மானியத்திற்கு, 75 ஆயி ரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. எனவே, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த் தினால், அது, அரசுக்கு கூடுதல் செலவை ஏற்படுத்தும் என, உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|