பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
10:15

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 165.24 புள்ளிகள் அதிகரித்து 16619.54 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 45.20 புள்ளிகள் அதிகரித்து 5042.30 புள்ளிகளோடு காணப் பட்டது. பங்கு வியாபாரம் நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. சர்வதேச அளவில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்திருந்தது. இது தவிர, வரும் நிதி ஆய்வுக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான "ரெப்போ ரேட்' விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப் பாட்டால் சில்லரை முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளில் முதலீடு மேற்கொண்டிருந்தனர். இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.55.18 ஆக இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|