பதிவு செய்த நாள்
07 ஜூன்2012
10:42

சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு அகவிலைப் படியை, ஏழு சதவிகிதம் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்: மாநிலத்தில் உள்ள எட்டு போக்குவரத்துக் கழக அலுவலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, கடந்த ஜனவரி மாதம் முதல், அகவிலைப் படியை, 58 சதவீதத்திலிருந்து, 62 சதவீதமாக உயர்த்தி, உத்தரவிடுகிறேன். இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, போக்குவரத்துக் கழகங்களிலிருந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும், குடும்ப ஓய்வுதியம் பெறுபவர்களுக்கும் பொருந்தும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, நிலுவை இல்லாமல் ரொக்கமாக, கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும். இதனல், போக்குவரத்துக் கழகங்களுக்கு, மாதத்துக்கு கூடுதலாக, 10 கோடியே 55 லட்ச ரூபாய் செலவாகும். அகவிலைப்படி உயர்வை, ஒரு லட்சத்து 19 ஆயிரம் தொழிலாளர்களும், 41 ஆயிரம் ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் பெறுகின்றனர். இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|