பதிவு செய்த நாள்
08 ஜூன்2012
00:30

புதுடில்லி:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு 54.95 ஆக உயர்ந்தது.நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், கடந்த நான்கு தினங்களாக நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு உள்ளது.
இதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள் பங்குச் Œந்தைகளில் @மற்கொள்ளும் முதலீடும் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்ட தொடர் சரிவு தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த நான்கு வர்த்தக தினங்களாக, ரூபாயின் வெளிமதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்பாக டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 56.38 ஆக மிகவும் Œரிவடைந்திருந்தது.
இதனால் இறக்குமதி செலவினம் அதிகரித்தது. இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு,நேற்று முன்தினம் 55.36 ஆக இருந்தது. இது, நேற்று 41 காசுகள் உயர்ந்து 54.95ல் நிலை பெற்றது.கடந்த இரண்டு வாரங்களுக்கு பிறகு, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|