கச்சா எண்ணெய் செலவினத்தால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்புகச்சா எண்ணெய் செலவினத்தால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு ... தபால் அலுவலகங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை தபால் அலுவலகங்களில் மினி பிரிட்ஜ் விற்பனை ...
தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2012
10:42

தமிழகம் முழுவதும் பீர் விலை நேற்று முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டது. ரகத்திற்கு ஏற்ப, 5 ரூபாய் முதல், 10 வரை உயர்ந்துள்ளதால் பீர் பிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில், 6,804 "டாஸ்மாக்' மதுபானக் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு, தமிழகம் முழுவதும் உள்ள, 41 குடோன்களில் இருந்து சரக்குகள் வினியோகிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம், கடந்த ஆண்டு, 18 ஆயிரம் கோடி ரூபாய், வருவாய் கிடைத்தது. விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற மது வகைகளுடன், பீர் வகைகளும் அதிகளவில் விற்பனையாகின்றன.
தினசரி, ஒவ்வொரு குடோன்களில் இருந்தும், குறைந்தபட்சம், 2,000 கேஸ் பீர் சப்ளை ஆகிறது. சராசரியாக, நாளொன்றுக்கு, 3 லட்சம் கேஸ், "டாஸ்மாக்' கடைகளுக்கு செல்கிறது. இதில், ஸ்ட்ராங் வகை பீர்கள், 70 சதவீதமும், லெகர் வகை பீர்கள், 30 சதவீதமும் கடைகளுக்கு வினியோகிக்கப்படுகின்றன. ஒரு கேசில், 12 பாட்டில்கள் இருக்கும். இதன்படி, நாளொன்றுக்கு, 36 லட்சம் பீர் விற்பனையாகிறது.
பீருக்கு தட்டுப்பாடு : தற்போது கோடைகாலம் என்பதால், "ஹாட்' வகைகளான, ரம், பிராந்தி, விஸ்கிகளை விட, வெப்பத்தைத் தணிக்க, குளிர்ந்த பீர்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இதனால், "டாஸ்மாக்' கடைகளில் பீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, "டாஸ்மாக்' நிர்வாகம் புதுப்புது பீர் வகைகளை, வரவழைத்து மதுபான கடைகளுக்கு வினியோகம் செய்து, தட்டுப்பாட்டை சமாளித்து வருகிறது.
விலை உயர்வு விவரம் (அடைப்புக்குள் பழைய விலை)
மார்கோபோலோ, பிளாக் நைட் , கோல்டன் ஈகிள் டீலக்ஸ் பிரிமியம், கோல்டன் ஈகிள் லேகர் : புதிய விலை ரூ.70 (பழைய விலை 65)
கல்யாணி பிளாக் லேபிள் பிரிமியம் லேகர், ரூ.80 (பழைய விலை-75)
கிங் பிஷர் சூப்பர் ஸ்ட்ராங் பிரிமியம் ரூ.80 (பழைய விலை-75)
புல்லட் சூப்பர் ஸ்ட்ராங் ரூ.80 (பழைய விலை-75)
ஜிங்காரோ மெகா ஸ்ட்ராங் பிரிமியர் ரூ.80 (பழைய விலை-75)
ஓரியன் லைட் பிரிமியம் பீர் ரூ.90 (பழைய விலை-85)
ஹேவார்ட்ஸ் 5000 அல்ட்ரா பிரிமியம் ஸ்ட்ராங் ரூ.90 (பழைய விலை-85)
கிங்பிஷர் கோல்டு பிரீமியம் ரூ.80 (பழைய விலை 70)
சாண்ட்பைபர் பிரீமியம் ரூ.80 (பழைய விலை 70)
மெட்ராஸ் டில்ஷனர் டீலக்ஸ் ரூ.80 (பழைய விலை 70)
ஓரியண்ட் 6000 சூப்பர் ஸ்டார்ங் ரூ.80 (பழைய விலை 70)
எஸ்என்ஜே 10000 சூப்பர் ஸ்ட்ராங் 90 (பழைய விலை 80)
ஹைவோல்டேஜ் சூப்பர் ஸ்டாரங் 90 (பழைய விலை 80)
பிரிட்டிஷ் எம்பயர் அல்ட்ரா பிரீமியம் எக்ஸ்குளூசிவ் ரூ. 100 (பழைய விலை 90)
கோல்ட் பிரீமியம் ஸ்ட்ராங் ரூ. 100 (பழைய விலை 90)
மேக்ஸ் 11000 சூப்பர் ஸ்ட்ராங் ரூ.100 (பழைய விலை 90)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)