பதிவு செய்த நாள்
15 ஜூலை2012
14:44

புதுடில்லி: அன்னிய முதலீட்டு வருவாய் சார்ந்த, வரி சீர்த்திருத்தத்திற்கு வகை செய்யும் பொது வரி எதிர் தவிர்ப்பு சட்டம் ("கார்') குறித்து ஆய்வு செய்ய தனி குழு ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங் அமைத்துள்ளார். மேலும், நடப்பு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட இந்த சட்ட விதிமுறைகள் அமலாவது, வரும் 2013ம் ஆண்டு ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பார்த்தசாரதி ஷோம் தலைமையில் அமைக்கப்பட்ட "கார்' குழுவில், என்.ரங்காச்சாரி, அஜய் ஷா, சுனில் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு, பல்வேறு நிதி அமைப்புகள், வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி, "கார்' சட்ட முன்வரைவை உருவாக்கும். ஏற்கனவே, நிதியமைச்சக செயலர் தலைமையில், "கார்' சட்டத்தை ஆய்வு செய்ய தனி குழு அமைத்துள்ள நிலையில், தற்போது நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரதமர் மன்மோகன்சிங், புதிய குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|