பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:12

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -இந்தியாவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்கள், தற்போது குறைந்த விலை கொண்ட, உயர்வகை சொகுசு கார்களை அறிமுகப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. கார் சந்தையின் மந்த நிலையால், விற்பனை எண்ணிக்கை பாதிக்கப்படாமல் இருக்க, இத்தகைய நிலைப்பாட்டை நிறுவனங்கள் எடுத்துள்ளன.வளர்ச்சிநாட்டில், உயர்வகை சொகுசு கார் சந்தையில், பீ.எம்.டபிள்யூ., ஆடி, மெர்சிடெஸ் பென்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்த சந்தையின் வளர்ச்சி, கடந்த 2010ம் ஆண்டில், 70-80 சதவீதம் என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது. இது, நடப்பு 2012ம் ஆண்டின், சென்ற ஜூன் வரையிலான அரையாண்டில், 10 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.கடந்த 2010-11ம் நிதியாண்டில், ஒட்டுமொத்த அளவில், 20 லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட உயர்வகை கார் விற்பனை, 27 சதவீதம் வளர்ச்சி கண்டு 32,764 ஆக உயர்ந்துள்ளது. இதில், டொயோட்டா பார்ச்சூனர்,ஹோண்டா அக்கார்டு, ஸ்கோடா சூபர்ப் உள்ளிட்ட கார்களும் அடங்கும்.இப்பிரிவின் வளர்ச்சி காரணமாக, 20 லட்ச ரூபாயில் தொடங்கும் ஆறு மாடல் உயர் வகை சொகுசு கார்களை விரைவில் சந்தைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.மெர்சிடெஸ் பென்ஸ்உதாரணமாக, மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், வரும் செப்டம்பரில் "பீ' பிரிவில், புதிய "ஸ்போர்ட்ஸ் டூரர்' காரை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும், "ஏ' பிரிவில் ஒரு காரும், ஜி.எல்.சி என்ற பன்முக பயன்பாட்டு வாகனத்தையும் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த மூன்று கார்களும் 20-25 லட்ச ரூபாய் விலை கொண்டதாக இருக்கும். தற்போது, மெர்சிடெஸ் பென்ஸ்இந்தியா நிறுவனத்தின் "சி' பிரிவு கார்கள் தான், மிகக் குறைவாக, அதாவது 31 லட்ச ரூபாய் விலை கொண்டவையாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.பீ.எம்.டபிள்யூ நிறுவனம் "எக்ஸ்1' உயர்வகை சொகுசு காரின் விலையை 22.40 லட்ச ரூபாயாக நிர்ணயித்துள்ளது. அதுபோன்று, ஆடி நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள "க்யூ3' காரின் விலை 26.21 லட்ச ரூபாயாக உள்ளது.ஆடி கார்ஆடி நிறுவனம் உலகளவில் 28 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு நிலவரப்படி, இந்திய சந்தையில், இந்நிறுவனத்தின் 6 மாடல் கார்கள் விற்பனை செய்யப்பட்டன. இது, தற்போது 13 ஆக உயர்ந்துள்ளது.மெர்சிடெஸ் பென்ஸ் இந்தியா, "பீ' பிரிவில் நடுத்தர சொகுசு கார்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் விற்பனை மூன்று மடங்கு உயர்ந்து வரும் 2016ம் ஆண்டில் 25,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பீ.எம்.டபிள்யூ., நிறுவனம்அது போன்று, பீ.எம்.டபிள்யூ நிறுவனமும், அதன் "3- சீரிஸ்' வகையில் மேம்பட்ட வசதிகள் கொண்ட காரை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மொத்தத்தில், ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடெஸ், ஆடி, பீ.எம்.டபிள்யூ ஆகிய மூன்று நிறுவனங்கள், இந்தியாவில் அவற்றின் விற்பனையில், 50 சதவீதத்தை 20 லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட விலை கொண்ட கார் பிரிவின் மூலம் பெறத்பெறத் திட்டமிட்டுள்ளன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|