பதிவு செய்த நாள்
31 ஜூலை2012
23:47
டோக்கியோ: சென்ற ஜூன் மாதத்தில், ஜப்பானின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 0.1 சதவீதம் என்றளவில் சரிவடைந்துள்ளது என, அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஜப்பானில், தொடர்ந்து மூன்றாவது மாதமாக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி சரிவடைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில், அந்நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 0.2 சதவீதம் என்றளவிலும், மே மாதத்தில், 3.4 சதவீதம் என்றளவிலும் சரிவடைந்திருந்தது.உலகளவில், பொருளாதார வளர்ச்சியில், ஜப்பான் மூன்றாவது மிகப்பெரிய நாடாக உள்ளது. ஆனால், இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக, இந்நாட்டின் மோட்டார் வாகனங்கள், மின்னணு சாதனங்கள் உற்பத்தி சரிவடைந்துள்ளது. இதன் காரணமாகவே, கணக்கீட்டு மாதத்தில், இந்நாட்டின் தொழில்துறை உற்பத்தி குறைந்து போயுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|