ஜப்பான் தொழில் துறை உற்பத்தி 0.1 சதவீதமாக வீழ்ச்சி ஜப்பான் தொழில் துறை உற்பத்தி 0.1 சதவீதமாக வீழ்ச்சி ... விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் டீசல் ...
செயற்கை ரப்பர் உற்பத்தி 11சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜூலை
2012
23:48

புதுடில்லி,: நடப்பாண்டு, ஏப்ரல் மாதத்தில், நாட்டின் செயற்கை ரப்பர் உற்பத்தி, 11 சதவீதம் சரிவடைந்து, 8,285 டன்னாக குறைந்துள்ளது. இதே மாதத்தில், இதன் பயன்பாடு, 5 சதவீதம் குறைந்து, 35,105 டன்னாக குறைந்துள்ளது என, ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயன்பாடுகடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், செயற்கை ரப்பர் உற்பத்தி, 9,262 டன்னாகவும், பயன்பாடு, 36,890 டன்னாகவும் இருந்தது.கணக்கீட்டு மாதத்தில், டயர் தயாரிப்பு நிறுவனங்களின் செயற்கை ரப்பர் பயன்பாடு, 8 சதவீதம் குறைந்து, 28,062 டன்னிலிருந்து, 25,834 டன்னாக சரிவடைந்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 5 சதவீதம் குறைந்து, 27,868 டன்னிலிருந்து, 26,420 டன்னாக குறைந்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாத இறுதி நிலவரப்படி, 49,880 டன் செயற்கை ரப்பர் கையிருப்பில் இருந்தது.செயற்கை ரப்பர், மோட்டார் வாகன டயர்கள் மற்றும் சைக்கிள் டயர்கள், டியூப்கள், காலணிகள், பெல்ட், ரப்பர் குழாய்கள் போன்றவற்றின் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.கடந்த 2011-12ம் நிதியாண்டில், உள்நாட்டில் செயற்கை ரப்பர் பயன்பாடு, 3 சதவீதம் அதிகரித்து, 4,23,350 டன்னாக உயர்ந்திருந்தது. இறக்குமதிஇது, முந்தைய 2010-11ம் நிதியாண்டில், 4,11,830 டன்னாக காணப்பட்டது. இதே ஆண்டுகளில், இதன் உற்பத்தி, 1,10,340 டன்னிலிருந்து, 1,10,599 டன்னாக வளர்ச்சிகண்டிருந்தது.கடந்த நிதியாண்டில், டயர் தயாரிப்பு துறை நிறுவனங்களின், ரப்பர் பயன்பாடு 3 சதவீதம் உயர்ந்து, 2,98,414 டன்னிலிருந்து, 3,07,325 டன்னாக அதிகரித்திருந்தது.கடந்த நிதியாண்டில், செயற்கை ரப்பர் இறக்குமதி, 8 சதவீதம் அதிகரித்து, 3,02,030 டன்னிலிருந்து, 3,27,625 டன்னாக உயர்ந்திருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)