பருவமழை தாமதத்தால் கரீப் பருவ சாகுபடி பரப்பளவு குறைந்தது பருவமழை தாமதத்தால் கரீப் பருவ சாகுபடி பரப்பளவு குறைந்தது ... வாழைத்தார் வரத்து குறைவு; விலை அதிகரிப்பு வாழைத்தார் வரத்து குறைவு; விலை அதிகரிப்பு ...
சுங்க வரி மற்றும் விலை உயர்வால்...இந்தியாவின் தங்கம் இறக்குமதி 350 டன்னாக சரிவு - பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2012
23:45

நடப்பு காலண்டர் ஆண்டில், ஜனவரி முதல் ஜூலை வரையிலான ஏழு மாதங்களில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 40 சதவீதம் குறைந்து, 350 டன்னாக சரிவடைந்துள்ளது என, உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.சர்வதேச மந்தநிலை, சுங்க வரிஅதிகரிப்பு, விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும், நாட்டின் நடப்பு கணக்குபற்றாக்குறையை கட்டுப்படுத்தும்நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கும் என்ற அச்சப்பாடு காரணமாகவும், தங்கம் இறக்குமதிசெய்வதை வர்த்தகர்கள் குறைத்துக் கொண்டுள்ளனர்.நடப்பு கணக்கு பற்றாக்குறைநாட்டின் இறக்குமதி பெருகி, ஏற்றுமதி குறைந்துள்ளதால், வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், இறக்குமதி உயர்ந்துள்ளதால், நாட்டின் நடப்பு கணக்குபற்றாக்குறையும் அதிகரித்துள்ளது.இதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, குறிப்பாக தங்க இறக்குமதியை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டில், தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 4 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், நடப்பு நிதியாண்டில் தங்க இறக்குமதி 35- 40 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கேற்ப, தங்க இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், சென்ற ஏப்ரல், மே மாதங்களில், 430 கோடி டாலராக சரிவடைந்துள்ளது. ஜூன், ஜூலை மாதங்களிலும் தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது.பருவமழைசென்ற 2011ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில், 553 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. இது, சென்ற செப்டம்பர் வரையிலுமாக, 753 டன்னாக உயர்ந்தது."நடப்பாண்டு செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் தங்க இறக்குமதி 450 டன்னை தாண்டுவது கடினம்' என, மும்பை தங்கம், வெள்ளி விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி தெரிவித்தார்.உள்நாட்டில், தங்கம் விலைஉயர்ந்துள்ளதால், தங்க ஆபரணங்கள் வாங்குவது குறைந்துள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் தங்க நகைகள் விற்பனை சரிவடைந்துள்ளது. மேலும், நடப்பாண்டு பருவமழை தவறியதால், ஊரகப் பகுதிகளில், மக்களின் செலவழிப்பு வருவாய் குறைந்து, தங்க ஆபரணங்களுக்கான தேவையை குறைத்துள்ளது.இது குறித்து, கோல்கட்டாவை சேர்ந்த ஸ்ரீ கணேஷ் ஜூவல்லரி ஹவுஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உமேஷ் பரேக் கூறும்போது, "பல மாதங்களாகவே தங்கத்தின் விலை, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. நிலையில்லாத விலையால் தங்க நகைகள்விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை சீரானவுடன் வாங்கலாம் என்ற மன நிலைக்கு நுகர்வோர் வந்து விட்டனர்' என, தெரிவித்தார்.புதிய உச்சம்நடப்பாண்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வும், அதைத் தொடர்ந்து உள்நாட்டில் அதன் விலை அதிகரிப்பும், தங்க ஆபரணங்கள் விற்பனை சரிய வழிவகுத்துள்ளது.சென்ற ஜூன் 19ம் தேதி நிலவரப்படி, மும்பையில், 10 கிராம் தங்கம் 30,295 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இடையில் விலை குறைந்திருந்த நிலையில்,நேற்று முன்தினம், இது மீண்டும் 30 ஆயிரம் ரூபாயை தாண்டியது. இதன் அடிப்படையில், தங்கத்தின் மீதான முதலீட்டில், ரூபாய் அடிப்படையில் 11.5சதவீத வருவாய் கிடைத்துள்ளதாகமதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 3-4 ஆண்டு களாக, தங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 100 சதவீத வருவாயை வழங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.தங்க முதலீட்டின் மீதான வருவாய் குறைந்துள்ள நிலையில், அதற்கு நிகரான வருவாயை வழங்கக்கூடிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதனால், தங்க இறக்குமதி குறைந்தாலும், புதிய திட்டத்தின் வாயிலாக, அது சார்ந்தமுதலீட்டில் குறிப்பிட்ட அளவிற்குவருவாயை பெறலாம்.பண்டிகை காலம்ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் மேத்தா கூறும்போது, "தங்கம் ரொக்கத்திற்கு இறக்குமதி செய்யப்படுவதால், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள், ஒரு சில வாரங்களுக்குள் அவற்றை விற்பனை செய்ய வேண்டும். ஆனால், சீசன் இல்லாததால் விற்பனை மந்தமாக உள்ளது. இதன் காரண மாக இதுவரை தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது' என தெரிவித்தார்.வரும் செப்டம்பரில், பண்டிகை காலம் துவங்குவதால், தங்கத்திற்கான தேவை மீண்டும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற 2011ம் ஆண்டு, தங்கம், சாதனை அளவாக 969 டன் இறக்குமதி செய்யப்பட்டது. இதில் உள்நாட்டு தேவை 933.4 டன்னாக இருந்தது. இது, முந்தைய 2010ம் ஆண்டு 963.1 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)