பதிவு செய்த நாள்
09 ஆக2012
10:15

மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 98.96 புள்ளிகள் அதிகரித்து 17699.52 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 29.25 புள்ளிகள் அதிகரித்து 5367.25 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்குச் சந்தை நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது. இந்நிலையில், ஐரோப்பாவில் ஐ.என்.ஜி குழுமம் உள்ளிட்ட ஒரு சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை முடிவுகள் சரிவடைந்து போயின. இது, சந்தை மதிப்பீட்டை விட குறைவு என்ற அடிப்படையில் அந்நாடுகளில் பங்கு வர்த்தகம் மந்தமடைந் தது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|