பதிவு செய்த நாள்
24 ஆக2012
01:28

ஈரோடு:எரிவாயு எடுத்துச் செல்வதற்கான குழாய் அமைக்கும் பணியால், பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கத் தயாராக உள்ளதாக, "கெயில்' என்று சுருக்கமாக அழைக்கப்படும், காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.தமிழகம்:"கெயில்' நிறுவனம் சார்பில், பெங்களூரில் இருந்து பஞ்சாப் மாநிலம் வரை, 30 ஆயிரம் கிலோ மீட்டருக்கு இயற்கை எரிவாயு கொண்டு செல்வதற்கான குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் இன்னும் குழாய் பதிக்கப்படவில்லை.இதற்கிடையில், கொச்சி துறைமுகத்தில் இருந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு குழாய் பதிக்கும் பணி, விரைவில் துவங்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், 38 கி.மீ., தூரம் குழாய் அமைக்கப்படும். இரண்டு அடி அகலம் கொண்ட குழாய் பதிப்பதால், அதை மையமாகக் கொண்டு, 20 மீட்டருக்கான இடத்தை, "கெயில்' நிறுவனம் கையகப்படுத்தும்.
தனியார் நிலத்துக்கு, புதிய நில வழிகாட்டி மதிப்பீட்டில் உள்ள தொகை மற்றும் கூடுதலாக 10 சதவீதத் தொகை, உரிமையாளருக்கு வழங்கப்படும்.மரம் நடுதல்;இருப்பினும், அவ்விடத்தை அந்நபர் சாதாரணமாக பயன்படுத்தலாம். பைப் லைன் மீது கட்டடம் கட்டுதல், மரம் நடுதல் போன்றவை மேற்கொள்ளக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில், 368 விவசாயிகளிடம் இருந்து, 96 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது.
இது பற்றி ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய தொகை, தயாராக உள்ளது. விரைவில் வருவாய்த் துறை, கெயில் நிறுவனம், போலீசார் மற்றும் விவசாயிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்கான தொகை வழங்கப்படும்.விவசாய நிலம் பாதிக்கப்படும் என்பதால், சாலை, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டிய பாதையில் குழாயை கொண்டு செல்ல வேண்டும் என, சில விவசாய அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், தேசிய அளவில் எந்த பாதையில் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டதோ, அதே பாதையில் கொண்டு செல்லப்படும் என, "கெயில்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|