பதிவு செய்த நாள்
10 செப்2012
15:42

ஆகஸ்ட் மாதத்தில் கார் மற்றும் பைக் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இது வாகன உற்பத்தி நிறுவனங்களிடையே பெரும் கவலையடைய செய்துள்ளது. கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் கார் விற்பனை பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கார் மார்க்கெட்டில் பெரும் பங்களிப்பை கொடுத்து வரும் மாருதியின் விற்பனை 41 சதவீதம் சரிவு கண்டதுதான். கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் மொத்தமாக 1,18,142 கார்கள் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் விற்பனையுடன் ஒப்பிடுகையில் இது 19 சதவீதம் குறைவாகும். கார் மார்க்கெட் விற்பனை வளர்ச்சி ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தாலும் இருசக்கர வாகன விற்பனை நல்ல வளர்ச்சி கண்டு வந்தது.கடந்த 3 ஆண்டுகளில் முதன்முறையாக இருசக்கர வாகன விற்பனை சரிவை சந்தித்துள்ளது. பருவமழை பொய்த்ததால் ஊரக மார்க்கெட்டில் இருசக்கர வாகன விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால், ஒட்டுமொத்த விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. கடந்த மாதம் உள்நாட்டு மார்க்கெட்டில் 7,66,127 இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டுடன் ஒப்பிடுகையில் இது 8.5 சதவீதம் சரிவை கண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தின் விற்பனையும் 11.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|