பதிவு செய்த நாள்
16 செப்2012
01:02

மும்பை:சென்ற ஜூலை மாதத்தில், நாட்டின் சேவைத் துறை ஏற்றுமதி, 1,106 கோடி டாலராக (60,830 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, (1,040 கோடி டாலர் - 57,200 கோடி ரூபாய்) 6.4 சதவீதம் அதிகம் என, ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.சேவைத் துறையின் கீழ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த துறைகள், மருத்துவம், போக்குவரத்து, நிதி, சரக்கு கையாளுதல் போன்றவை இடம்பெற்றுள்ளன.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இத்துறையின் பங்களிப்பு, 55 சதவீதம் என்ற அளவில் உள்ளது. கணக்கீட்டு மாதத்தில், சேவைத் துறையின் இறக்குமதி, 10.3 சதவீதம் உயர்ந்து, 590 கோடி டாலரிலிருந்து (32,450 கோடி ரூபாய்), 650 கோடி டாலராக (35,750 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், சேவைத் துறை ஏற்றுமதி, 4,440 கோடி டாலராக (2.44 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இதே நான்கு மாத காலத்தில், சேவைத் துறை இறக்குமதி, 2,704 கோடி டாலர் (1.48 லட்சம் கோடி ரூபாய்) என்ற அளவில் உள்ளது.
ரிசர்வ் வங்கி, சேவைத் துறை ஏற்றுமதி, இறக்குமதி குறித்த விவரங்களை, 45 நாட்களுக்கு ஒரு முறை வெளியிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|