பதிவு செய்த நாள்
16 செப்2012
01:04

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் உள்ள சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன.
அவற்றில், நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. முட்டை உற்பத்திக்காக, 16 - 18 வார வயது உடைய கோழிகள் விடப்படுகின்றன. அந்தக் கோழிகள், தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகள் வரை, முட்டையிடுகின்றன.முட்டை உற்பத்தி:ஒரு கோழி, சராசரியாக, 320 முட்டைகள் இடுகிறது.
முட்டை உற்பத்தியை அதிகரிக்க, மக்காச்சோளம், சோயா உள்ளிட்ட மூலப் பொருட்கள் அடங்கிய தீவனங்கள், கோழிகளுக்கு வழங்கப்படுகின்றன.இவ்வகை தீவனங்களின் விலை, கடுமையாக உயர்ந்துள்ளது. மழைப்பொழிவு இல்லாததால், மக்காச்சோளம் உள்ளிட்ட மூலப் பொருட்கள் உற்பத்தி குறைந்துள்ளது. இது, கோழித் தீவனங்களின் விலையேற்றத்துக்கு வழி வகுத்துள்ளது.கடந்த, 2002ம் ஆண்டு, 75 கிலோ எடை கொண்ட கோழித் தீவன மூட்டையின் விலை, சராசரியாக 570 ரூபாயாக இருந்தது. இது, நடப்பாண்டு ஆகஸ்ட் மாத நிலவரப்படி, 1,686 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதன்படி, கடந்த பத்து ஆண்டுகளில், கோழித் தீவனத்தின் விலை, இரண்டு மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என, முட்டை விலையை நிர்ணயம் செய்யும், நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (என்.இ.சி.சி.,) தெரிவித்துள்ளது.மானிய விலை:கோழித்தீவனத்தின் விலை ஏற்றத்தால், முட்டை விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியான சூழலை சமாளிக்கும் விதமாக, மனிதர்களுக்கு உதவாத கோதுமையை மானிய விலையில் வழங்குமாறு, கோழிப்பண்ணையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|