பதிவு செய்த நாள்
18 செப்2012
15:49
ரூ.21.49 லட்சம் என்ற கடும் சவாலான விலையில் புதிய பென்ஸ் பி கிளாஸ் பிரிமியம் ஹேட்ச்பேக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்தது. இந்த புதிய பென்ஸ் கார் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. பி கிளாஸ் பி 180 வேரியண்ட் ரூ.21.49 லட்சத்திலும், பி 180 ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ரூ.24.87 லட்சம் ஆரம்ப விலையிலும் கிடைக்கும். இந்த கார் ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் இந்த புதிய பென்ஸ் காரில் எஸ்எல்எஸ் ஏஎம்ஜி காரில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 7ஜி டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. புளுடூத் வசதியுடன் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. 7 காற்றுப் பைகள், டிஸ்க் பிரேக்குகள், அட்டென்ஷன் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் உள்ளன.இந்த கார் லிட்டருக்கு 14.8 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்றளித்துள்ளது. பை ஸினான் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் கண்ணாடி கூரை உள்ளிட்ட கூடுதல் சிறப்பு அம்சங்களையும் இந்த புதிய பென்ஸ் கார் கொண்டிருக்கிறது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|