ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும்ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும் ... ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர் ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர் ...
விரைவில் இந்தியாவில்... உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2012
12:06

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் இந்தியா சார்பில் வரும் 2017ம் ஆண்டுக்குள் உருவாக்கப்படும் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாதாரண கம்ப்யூட்டர்களை விட, பல மடங்கு வேகமான செயல்திறன் கொண்டதாகவும், கடினமான கணக்குகளையும் வினாடிகளில் செய்யும் திறன் கொண்ட கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர் என அழைக்கப்படுகிறது. இவ்வகை கம்ப்யூட்டர்கள் ராணுவம், விண்வெளி, ஆராய்ச்சிக்கூடம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் முதன் முதலாக சூப்பர் கம்ப்யூட்டர் 1960களில் அறிமுகமானது. இந்தியா திட்டமிட்டுள்ள இந்த சூப்பர் கம்ப்யூட்டர், தற்போது உள்ள அதிவேக சூப்பர் கம்ப்யூட்டரான ஐ.பி.எம்., ன் "செகுயா' வை விட 61 மடங்கு வேகமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 4,700 கோடி ரூபாய். திட்டமிடப் பட்டுள்ள காலம் 5 ஆண்டுகள்.

வேகம் என்ன


petaflop என்பது கம்ப்யூட்டரின் வேகத்தை குறிக்கிறது. ஒரு petaflopஒரு வினாடிக்கு ஆயிரம் டிரில்லியன் வேகத்தில் செயல்படும் திறன் கொண்டது. ஒரு டிரில்லியன்க்கு, 1க்கு அருகில் 18 ஜீரோக்களை சேர்க்க வேண்டும். அப்படியென்றால் இதன் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதை தீர்மானித்துக் கொள்ளுங்கள். 2012ம் ஆண்டின் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டராக தேர்வு செய்யப்பட்ட ஐ.பி.எம்., நிறுவனம் தயாரித்த "செகுயா' என்ற சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம் 16.32 petaflop அதாவது 7.8 லட்சம் அதி வேகமான லேப்டாப் கம்ப்யூட்டர்களை ஒன்றிணைப்பதற்கு சமம். ஆனால் மத்திய அரசு திட்டமிட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் வேகம், இந்த ஐ.பி.எம்., கம்ப்யூட்டரின் வேகத்தை விட 61 மடங்கு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்களின் வரிசையில், இந்தியா தற்போது 58வது இடத்தில் உள்ளது. இந்தியா முதன்முதலாக 1987ம்ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டது. நாட்டின் முதல் சூப்பர் கம்ப்யூட்டர் "பரம்'.

“ டாப் - 5' :
1993ம் ஆண்டில் இருந்து உலக நாடுகள் தயாரிக்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களில் எது அதிவேகமானது என, ஆண்டுதோறும் "ரேங்க்' பட்டியல் வெளியிடப்படுகிறது. சமீபத்திய ஐந்து ஆண்டுகளின் சூப்பர் கம்ப்யூட்டர்களை பற்றி பார்க்கலாம்.

ஆண்டு சூப்பர் கம்ப்யூட்டர் வேகம் நாடு
2008 ஐ.பி.எம்., ரோட்ரன்னர் 1.026 petaflop அமெரிக்கா
2009 கேரி ஜாகுவர் 1.105 petaflop அமெரிக்கா
2010 டியான்கி-1ஏ 1.759 petaflop சீனா
2011 பியூஜிட்சு கே கம்ப்யூட்டர் 10.51 petaflop ஜப்பான்
2012 ஐ.பி.எம்., செகுயா 16.32 petaflop அமெரிக்கா

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)