ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும்ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும் ... சென்னை வந்தது ட்ரீம்லைனர் விமானம் சென்னை வந்தது ட்ரீம்லைனர் விமானம் ...
ஆட்டோ மொபைல் துறையில் மைக்ரோ கன்ட்ரோலர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2012
15:24

ஆட்டோ மொபைல் துறையில் எலக்ட்ரானிக் சிஸ்டத்திற்கான தேவைக்கூடிக் கொண்டே இருக்கிறது. அடுத்த பத்து வருடங்களுக்கு இந்த எலக்ட்ரானிக் வளர்ச்சி சீராக கூடிக் கொண்டே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்களிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும், வசதி மற்றும் சொகுசு அம்சங்களிலும், மாசுக்கட்டுப்பாடு எரிபொருள் சிக்கனம் போன்ற அரசு வலியுறுத்தும் அம்சங்களுக்காகவும் மக்களின் தேவை பெருகிக் கொண்டே இருப்பதாகும். இந்த தேவைகளுக்கு காரணமான எலக்ட்ரானிக் சிஸ்டத்திற்கு அடித்தளமாக இருப்பது ஆட்டோமேடிக் மைக்ரோ கன்ட்ரோலர்கள் ஆகும். இம்மைக்ரோ கன்ட்ரோலரின் பயன்பாட்டையும் இதன் தொழில்நுட்பத்தை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

மைக்ரோ கன்ட்ரோலர்கள் கார்களின் மூன்று பிரிவுகளான லோ-என்ட், மிட்-ரேன்ஜ் மற்றும் லக்சுரி - ரேன்ஜ் என்பதற்கேற்ற அம்சங்களை வழங்க உதவுகிறது. முதலில் லக்சுரி அல்லது ஹை என்ட் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்கள் சில காலங்களுக்குள் மிட்-ரேன்ஜிற்கும் பின்பு லோ-என்ட் கார்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்களின் தேவையும் உற்பத்திச் செலவு குறைவதும் காரணமாக அமைகிறது. தற்போதைய பல எலக்ட்ரானிக் சிஸ்டங்கள் மேன்மைப்படுத்தப்படுவதும், விரிவாக்கப்படுவதும் அவ்வப்போது நிகழ்கிறது. உதாரணத்திற்கு ஏர்-பேக்கை எடுத்துக் கொள்வோம். முதலில் ஓட்டுனர் பாதுகாப்பிற்கு மட்டும் ஸ்டியரிங் வீலில் பொருத்தப்பட்ட ஏர்-பேக் பின்பு ஓட்டுனரின் பக்கவாட்டில் கதவிலும், முன் இருக்கையில் ஓட்டுனர் பக்கத்தில் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்கு டாஷ்போர்டிலும் பொருத்தப்பட்டது.

இப்பொழுது லக்சுரி ஹை என்ட் கார்களில் பின்பு இருக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக ஏர் பேக் பொருத்தப்படுகிறது. வட்ட பலூன் வடிவில் இருக்கும் ஏர் பேக்குகளுடன் காட்டன் -டைப் சைட் ஏர்பேக்குகள் பக்கவாட்டில் இருக்கும் படியும் சில கார்களில் வண்டியின் மேற்கூரையில் இருந்து விரியும் படியும் கூட அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதுகாப்பு அம்சங்கள் எலக்ட்ரானிக் சிஸ்டம் மூலம் விரிவுபடுத்தப்படுகிறது. எனவே எலக்ட்ரானிக் சிஸ்டங்களின் மேம்பாட்டிற்கு ஏற்ப மைக்ரோ கன்ட்ரோலர்களின் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது.

அடுத்த ஐந்து வருடங்களில் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும். ஜிபிஎஸ் உடனான நேவிகேஷன் சிஸ்டம், ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் "பை-வயர்' ப்ரேக்கிங் மற்றும் ஸ்டியரிங் சிஸ்டம், கொலிஷன் வார்னிங் என்ற மோதுதல் எச்சரிக்கை மோதுதலை தவிர்க்கும் கொலிஷன் அவாய்டன்ஸ் சிஸ்டம் போன்றவை அவற்றில் சில, வாகனங்களில் பொருத்தப்படும் பல எலக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட்களுக்கு (உஇக்) இடையே தொடர்பை ஏற்படுத்தும் மைக்ரோ கன்ட்ரோலர்கள் கம்ப்யூட்டரின் சிபியூவை விட அதிக சிலிக்கான்களை கொண்டுள்ளதாக இருக்கின்றன. கடந்த மூன்று தலைமுறைகளில் மைக்ரோ கன்ட்ரோலர்கள் 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தவைகளாகவும், (இகக் த்ரூபுட் வகையில்), புரோகிராம் மெமரியில் 40 மடங்கு அதிக வளர்ச்சியையும், சிப்பில் (இஏஐக) உள்ள ட்ரான்ஸிஸ்டர்களின் எண்ணிக்கை 300 என்ற அளவில் அதிகமாகவும் மாறியுள்ளன. இன்றைய ஏர் பேக் மற்றும் ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றிற்கு 32-பிட் கீஐகுஇ ப்ராசசர் உபயோகப்படுத்தப்படுவதே இதற்கு சான்றாகும். மைக்ரோ கன்ட்ரோலர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சென்சார் மற்றும் ஆக்ஸ்லேட்டர்களின் எண்ணிக்கைகளும் கூடிக் கொண்டே போகிறது.

தற்பொழுது ஃபெயில் - சேஃப்' மெதட் என்ற "பழுதில்லா முறையை' கொண்ட அம்சங்கள் நிறைய உள்ளன. ஆனால் இனி வருங்காலத்தில் "ஃபால்ட்-டாலரன்ட்' முறை அதிகம் இடம்பெறும். அதாவது இன்றைய ஏபிஎஸ் ப்ரேக்கிங் முறை "ஃபெயில் -சேஃப்' முறை அதாவது இதில் பழுது ஏற்பட வாய்ப்பு மிகக் குறைவாகவே பழுது ஏற்பட்டால் உடனடியாக ஏபிஎஸ் முறை ரத்து செய்யப்பட்டு, ஹைட்ராலிக் ப்ரேக்கிங் முறை உபயோகிக்க வழிவகுக்கும். ஆனால் "ஃபால்ட் - டாலரண்ட்' முறையில் பழுது ஏற்படுவதை கண்டுபிடிக்கும் சிபியூவை கண்காணிக்கும் இரண்டாவது சிபியு ஒன்றும் பொருத்தப்படும். இது "ஸ்டான்ட் அலோன் மைக்ரோ கன்ட்ரோலராக' இருந்து முதல் சிபியுவை கண்காணிப் பதுடன் மாற்று வழிகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது.

வயர் ப்ரேக், வயர் ஸ்டியரிங் போன்ற அமைப்புகளுக்கு "பெயில் - சேஃப்' முறை சரியில்லையென்றால் அதற்கு மாற்று ஹைட்ராலிக் முறை கிடையாது. எனவே அதற்கு வேறு அவசர மாற்று வசதியை பரிந்துரைக்கும் ஃபால்ட்-டாலரன்ட் முறை தேவைப்படுகிறது. எனவே வருங்காலத்தில் இம்மைக்ரோ கன்ட்ரோலர்களின் வளர்ச்சி பல நல்ல வசதியளிக்கும் அம்சங்கள் மட்டுமின்றி உயிர் காக்கும் பாதுகாப்பு அம்சங்களுக்கும் உறுதுணை புரிகின்றது என்பது வரவேற்க வேண்டிய ஒன்றாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)