பதிவு செய்த நாள்
07 அக்2012
16:20

புதுடில்லி:அமெரிக்காவின், "போயிங்' நிறுவனத்திடமிருந்து, மூன்றாவது, "ட்ரீம்லைனர்' விமானத்தை, "ஏர் இந்தியா' நிறுவனம் நேற்று பெற்றது.அமெரிக்காவைச் சேர்ந்த, பிரபல விமான தயாரிப்பு நிறுவனம், "போயிங்!' இந்த நிறுவனம், "போயிங்-787 ட்ரீம்லைனர்' என்ற, நவீன ரக விமானங்களைத் தயாரித்து, விற்று வருகிறது.
இந்த ரக விமானத்தில், 210 முதல், 290 பேர் பயணிக்கலாம்; பல்வேறு வசதிகள் இந்த விமானத்தில் உள்ளன. குறைந்த எரிபொருளில், அதிக தூரம் இயங்கக் கூடிய வகையில், இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த, "ட்ரீம்லைனர்' விமானங்களில், 27 விமானங்களை வாங்க, போயிங் நிறுவனத்திடம், ஏர் இந்தியா நிறுவனம், "ஆர்டர்' கொடுத்திருந்தது.
இதுவரை, இரண்டு விமானங்கள் மட்டுமே, சப்ளை செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், மூன்றாவது விமானம், நேற்று முறைப்படி, ஏர் இந்தியா நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்டது.போயிங் நிறுவனம், அமெரிக்காவில், புதிதாக ஒரு விமானத் தயாரிப்பு தொழிற் சாலையை அமைத்துள்ளது. இந்த தொழிற்சாலையிலிருந்து, முதலில் தயாரிக்கப்பட்ட விமானம் என்ற பெருமை, ஏர் இந்தியாவுக்கு தற்போது சப்ளை செய்யப்பட்டுள்ள, "ட்ரீம்லைனர்' விமானத்துக்குக் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|