பதிவு செய்த நாள்
08 அக்2012
00:22

சேலம்:கர்நாடகாவில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த, சின்ன வெங்காயம் வரத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால், சின்ன வெங்காயம் விலை உயர்ந்துஉள்ளது.தமிழகத்தில், சேலம், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில், அதிக அளவில், சின்ன வெங்காயம் விளைகிறது. ஆனால், நடப்பு ஆண்டில் சின்ன வெங்காய விளைச்சல், எதிர்பார்த்த அளவு இல்லை. தமிழகத்துக்கு, அதிக அளவில், கர்நாடக மாநிலம் மைசூரின் குண்டல்பேட்டை, நகரம், தர்க்கனப்பள்ளி, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ஆகிய இடங்களில் இருந்து விற்பனைக்கு வந்து கொண்டிருந்த சின்ன வெங்காயத்தின் வரத்து, சில நாட்களாக, முற்றிலும் நின்று விட்டது.
மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, கடந்த மாதம் வரை, நாள் ஒன்றுக்கு, 1,500 டன் சின்ன வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருந்தது.இந்த வெங்காயத்துக்கு, தமிழகத்தை விட, ஆந்திராவில், கூடுதல் விலை கிடைப்பதால், வடமாநில வியாபாரிகள், வெங்காயத்தை, ஆந்திர மாநிலத்துக்கு அனுப்பி வருகின்றனர்.வெளிமாநில வெங்காயத்தின் வரத்தில், கடும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின், சேலம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் வெங்காய சீசன் முடிவுக்கு வந்து விட்டது.
இதன் காரணமாக, தமிழக Œந்தைகளில், சின்ன வெங்காயத்துக்கு கடும் கிராக்கி நிலவி வருகிறது.சின்ன வெங்காயத்தின் விலை, கிலோவுக்கு, 12 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது. 2,100 ரூபாய்க்கு விற்ற, 75 கிலோ மூட்டை சின்ன வெங்காயம், 3,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, சில்லரை விற்பனையில், கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சின்ன வெங்காயத்தின் விலை, இரண்டு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து, சேலத்துக்கு விற்பனைக்கு வந்து கொண்டிருந்த பெரிய வெங்காயம் வரத்து, பாதியாக குறைந்துவிட்டது.சேலத்தில், பெரிய வெங்காயம், கிலோ, 15 முதல், 17 ரூபாய் வரையும், 50 கிலோ மூட்டை, 750 முதல், 850 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|