பதிவு செய்த நாள்
08 அக்2012
00:24

ஈரோடு:மின்வெட்டு, டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால், ஜவுளி விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஜவுளி உற்பத்திக்கு மட்டுமின்றி, அதை பதப்படுத்தவும், மதிப்பு கூட்டவும், மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது, ஈரோடு நகர் பகுதியில், 12 மணி நேரமும், புறநகர் பகுதிகளில், 14 மணி நேரம் வரையிலும் மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு, டீசல் விலையை, லிட்டருக்கு, ஐந்து ரூபாய் வரை உயர்த்தி உள்ளது.இதனால், ஜவுளி உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விசைத்தறியில், ஜெனரேட்டர் பயன்படுத்தும் போது, ஒரு மணி நேரத்துக்கு, 40 ரூபாய் வரை செலவாகிறது.
தவிர, ஒரு பண்டலுக்கு, 150 ரூபாயாக இருந்த போக்குவரத்து செலவு, தற்போது, 190 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, ஜவுளி விலை, 10 சதவீதம் வரை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, ஈரோடு, கனி மார்க்கெட் தினசரி ஜவுளி வியாபாரிகள், சங்க தலைவர் நூர்சேட் மற்றும் வாரச்சந்தை வியாபாரிகள், சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது:தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடையால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகைக்கு, ஒரு மாதமே உள்ள நிலையில், ஜவுளி விலை, 10 சதவீதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|