பதிவு செய்த நாள்
11 அக்2012
01:25

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்டு பூர்ஸ் (எஸ் அண்டு பி), இந்தியாவின் கடன் தகுதி மதிப்பீட்டை குறைக்க வாய்ப்புள்ளது என, எச்சரிக்கை விடுத்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சுணக்கம் கண்டது.
ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள வங்கிகள், சொத்துக்களை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற சர்வதேச நிதியத்தின் அறிவிப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், நுகர்பொருட்கள் துறை தவிர்த்து, வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பெரும்பாலான துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 162.26 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,631.10 புள்ளி
களில் நிலைகொண்டது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் மூன்று நிறுவனப் பங்குகள் தவிர, ஏனைய 27 நிறுவனப் பங்குகளின் விலை, சரிவடைந்திருந்து. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி', 52.45 புள்ளிகள் சரிவடைந்து, 5,652.15 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,686.50 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,647.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|