பதிவு செய்த நாள்
18 அக்2012
17:14
புனே: பஜாஜ் ஆட்டோ நிறுவனம், ஒரு ஆண்டுக்கு முன், கேடிஎம் ட்யூக் 200 என்ற, சொகுசு பைக்கை அறிமுகப்படுத்தியது. அப்போது இதன் விலை, ரூ.1.17 லட்சம் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சில மாதங்களுக்கு பிறகு, இந்த பைக்கின் விலையில், ரூ.3,500 உயர்த்தப்பட்டது. தற்போது, மேலும், ரூ.8,000 அளவுக்கு விலை, மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விலை, தமிழகத்தில் மாறுபடும்.
மஹாராஷ்டிராவில், புனே அருகே, சாகன் என்ற இடத்தில் உள்ள தொழிற்சாலையில் தான், இந்த பைக் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கும், இந்த பைக் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பைக்கில், 199.5 சிசி திறன் கொண்ட, லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் படைத்தது. இந்த பைக்கில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின், சிபிஆர்150ஆர் பைக்குக்கு, கேடிஎம் ட்யூக் பைக், கடும் போட்டியை அளித்து வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|