பதிவு செய்த நாள்
11 நவ2012
02:36
புதுடில்லி : சென்ற அக்டோபர் மாதத்தில், உள்நாட்டில் விற்பனையான, மொத்த வாகனங்களின் எண்ணிக்கை, 16.53 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை (14.40 லட்சம் வாகனங்கள்) விட, 14.81 சதவீதம் அதிகமாகும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.கணக்கீட்டு காலத்தில், உள்நாட்டில், கார்கள் விற்பனை, 23.09 சதவீதம் உயர்ந்து, 1.40 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 1.72 லட்சமாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு, இதுவரையில், உள்நாட்டில், மார்ச் மாதத்தில் தான், அதிக அளவில் கார்கள் விற்பனையாகி உள்ளன.
அதாவது, இம்மாதத்தில் விற்பனையான கார்களின் எண்ணிக்கை, 2.29 லட்சமாகும்.மோட்டார் சைக்கிள்கள் விற்பனை, 6.71 சதவீதம் வளர்ச்சிகண்டு, 8.77 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 9.36 லட்சமாக அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் விற்பனை, 12.26 சதவீதம் வளர்ச்சியடைந்து, 11.44 லட்சம் என்ற எண்ணிக்கையிலிருந்து, 12.85 லட்சமாக அதிகரித்துள்ளது.வர்த்தக வாகனங்கள் விற்பனை, 7.59 சதவீதம் உயர்ந்து, 62,013 என்ற எண்ணிக்கையிலிருந்து, 66,722 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|